850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக்
டெல்லி: தற்போது மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 543. இந்த எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த இருப்பதாக மத்திய அரசு முன்மொழிவை கொடுத்திருக்கிறது.
இந்த முன்மொழிவின்படி, இந்த முன்மொழிவின்படி, மொத்த இடங்களின் எண்ணிக்கை 850-ஆக உயர்த்தப்படும். இவற்றில், 815 இடங்கள் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்காக ஒதுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன?
தற்போதுள்ள மக்களைவையின் 543 இடங்கள் என்பது, கடந்த 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அப்போது நாட்டின் மக்கள் தொகை சுமார் 55 கோடியாக இருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை சுமார் 140 கோடியாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி எண்ணிக்கையும் அதிகரிப்பதே தொகுதி மறுசீரமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
இந்தியா கூட்டணி எதிர்ப்பு
இந்த சீரமைப்பு மக்கள் தொகையின் அடிப்படையில்தான் செய்யப்படும். அதாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக எம்பி தொகுதிகளும், குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு குறைந்த தொகுதிகளும் உருவாக்கப்படும். அப்படியெனில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது. காரணம் தமிழ்நாடு கடந்த காலங்களில் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்கிறது. அதற்கு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, பழிவாங்கிவிடக்கூடாது என்று திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
முக்கிய மசோதா
மத்திய அரசு இந்த முன்மொழிவுடன் நிற்காமல், தொகுதி மறுவரையறை குறித்த கட்டாய விதியை நீக்கும் வகையில், அரசியலமைப்பின் 82-வது சரத்து திருத்த இருக்கிறது. அடுத்த தொகுதி மறுவரையறைப் பணி, 2026-க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் அமையும் என்று 82-வது சரத்தின் மூன்றாவது நிபந்தனை கூறுகிறது. ஆனால், முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதா அந்த முழுமையான நிபந்தனையையும் நீக்குகிறது.
தென் மாநிலங்களின் நிலைமை
இதன் மூலம் 2031 மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்கலாமல், 2026லேயே தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படும். இப்படி செய்வதால் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மொத்த தென் மாநிலங்களும் அடி வாங்கும். இந்த மாநிலங்கள் எல்லாம் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு












Click it and Unblock the Notifications