திசைக்கு ஒரு பக்கம் சிதறல்- பெங்களூரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!
டெல்லி: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக பாஜக அல்லாத காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இம்முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

இதன் முதல் கட்டமாக கடந்த மாதம் 23-ந் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 6 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். மொத்தம் 16 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூலை 13,14-ந் தேதிகளில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே மத்தியில் ஆளும் பாஜக அரசு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இப்பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் ஆதரிக்கின்றன. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் ஜூலை 13,14-ல் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications