சிம்லாவுக்கு பதில் ஜெய்ப்பூர்? ஜூலை 14-ல் அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம்!
டெல்லி: பாஜக அல்லாத காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 14-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டம் சிம்லாவுக்கு பதில் ஜெய்ப்பூரில் நடைபெறும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸை உள்ளடக்கிய இந்த எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 6 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், இடதுசாரி கட்சிகளின் சீதாராம் யெச்சூரி, டி ராஜா உள்ளிட்ட 16 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாட்னா ஆலோசனைக் கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த பொது வேட்பாளர்களை நிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன. இக்கூட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பை அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டார். இதனால் மெகா கூட்டணியில் ஆம் ஆத்மி நீடிக்குமா? என்பது கேள்விக்குறி. மேலும் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சி இடையே கடும் கருத்து மோதல் நிலவி வருகிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடத்துவது என முடிவு செய்துள்ளனராம். ஜூலை 14-ந் தேதி ஜெய்ப்பூரில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்படுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications