லண்டனை மிரள வைக்கும் மும்பை தொழிலாளர்களின் டெக்னிக்.. பிரம்மித்து போன ஆனந்த் மஹிந்திரா.. செம
டெல்லி: மும்பையில் இருக்கும் டப்பாவாலா சர்வீஸை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு லண்டனில் ஒரு புதிய டிபன் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவர் தொடர்ச்சியாக அதில் பல்வேறு வீடியோக்கள் மற்றும் அவருக்கு பிடித்தமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்.

அப்படி தான் அவர் இப்போது பகிர்ந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பையில் வீதிகளில் இருக்கும் டப்பாவாலாக்கள் பிரிட்டன் வரை ஏற்படுத்திய தாக்கத்தையே இது காட்டுவதாக இருக்கிறது.
டப்பாவாலா சேவை: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்த டெலிவரி முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது மும்பையின் பிரபல டப்பாவாலா அமைப்பை முன்னுதாரணமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். நகரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவர்களின் வீடுகளில் தயாரிக்கப்பட்ட உணவைச் சுடச் சுட கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.
மும்பையில் உள்ள இந்த பாரம்பரிய உணவு விநியோக முறை நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.. இதில் இருப்போர் பெரும்பாலும் படிக்காதவர்கள். இருப்பினும், இவர்கள் பின்பற்றும் எளிமையான முறைகளால் இதில் எப்போதும் தவறுகளே நடக்காதாம்.
சுடச் சுட டெலிவரி: இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் உணவைச் சுடச் சுட டெலிவரி செய்தாலும் இப்போது இருக்கும் டெலிவரி செயலிகளைப் போல இவர்கள் பைக், ஸ்கூட்டர்களை எல்லாம் பயன்படுத்துவதில்லை. மாறாக பெரும்பாலும் மின்சார ரயில்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். இதையும் கூட பலரும் பாராட்டியே வருகிறார்கள்.

இந்த மும்பை டப்பாவாலாக்களை முன்னுதாரணமாகக் கொண்டு தான் லண்டனில் டிபன் டெலிவரி முறையை அறிமுகப்படுத்தி உள்ளார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கமாகும். இதற்காக இவர்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்டீல் லன்ச் பாக்ஸ்களை தான் பயன்படுத்துகிறார்கள். அதில் தான் உணவை டெலிவரி செய்கிறார்கள். இவர்கள் சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்கிறார்கள்.
ஸ்டீல் லன்ச் பாக்ஸ்: அந்த ஸ்டீல் லன்ச் பாக்ஸை துணியால் போர்த்திக் கொண்டு டெலிவரிக்கு எடுத்து செல்கிறார்கள். இந்த நிறுவனம் இப்போது சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இதை மேலும் விரிவுபடுத்த அந்நிறுவனம் முயல்கிறது.. இது தொடர்பான வீடியோவை தான் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டப்பாவாலா: அலுவலகங்களில் பணி புரிவோருக்கு அவர்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று உரிய நேரத்தில் அவர்களுக்கு சப்ளை செய்வதே இந்த டப்பாவாலாவின் நோக்கமாகும். டப்பாவாலா தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்கள். இருந்தாலும் தவறே இல்லாமல் டெலிவரி தொடர்ச்சியாக இவர்கள் செய்து வருகிறார்கள். மேலும், இவர்கள் எப்போதும் பணியில் விடுப்பு எடுப்பதே இல்லையாம்.
பருவமழை காலத்தில் புயல் ஏற்பட்டு கனமழை கொட்டினாலும் இவர்கள் டெலிவரியை மிஸ் பண்ணவே மாட்டார்களாம். 125 ஆண்டுகளாக நடைபெறும் டப்பாவாலா தொழில் நடந்து வருகிறது. மிகக் குறைந்த விலையில் சிறப்பான தொழிலைச் செய்து வருவதால் இப்போதும் தொடர்ந்து இவர்கள் பிஸ்னஸ் விரிவடைந்தே வருகிறதாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications