Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி கண்ணை பாருங்க.. இதுதான், இந்த விஷயம்தான் அவரை ஸ்பெஷலாக்குது- கங்கனா ரணாவத்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவில் உள்ள வீரபத்ரசாமி கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் போட்டோவை பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரணாவத் அதுபற்றி கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

Look at his eyes its sharper and sparkling than a blazing sword, says Kanagana Ranaut

இதற்காக 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ள பிரதமர் மோடி தற்போது பல கோவில்களுக்கு சென்று வருகிறார். கடந்த 11ம் தேதி அவர் விரதத்தை தொடங்கி கடைப்பிடித்து வருகிறார்.

இதற்கிடையே தான் நேற்று ஆந்திர மாநிலம் லெபாக்‌ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கோவிலில் அமர்ந்து தெலுங்கில் எழுதப்பட்ட ரங்கநாத ராமாயணத்தின் சில பாடல்களை பக்தர்கள் பாட கேட்டார். இந்த கோவில் ராமாயணத்துடன் தொடர்பு உடையது என்பதால் தான் பிரதமர் மோடி வந்து தரிசனம் செய்தார்.

அதாவது ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்தி சென்றபோது ஜடாயு பறவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது அது படுகாயமடைந்த நிலையில் அந்த வழியாக ராமர் வந்தபோது சீதையை ராவணன் கடத்தி சென்றதாக கூறிய பிறகு ஜடாயு உயிரிழந்தது. அதன்பிறகு ராமர் அருளால் ஜடாயு மோட்சம் பெற்றதாக கூறப்படும் நிலையில் மோட்சம் பெற்ற இடம் தான் லெபாக்‌ஷி என கூறப்படுகிறது. இப்படி ராமாயணத்துடன் இந்த கோவில் தொடர்பு கொண்டுள்ளது.

Look at his eyes its sharper and sparkling than a blazing sword, says Kanagana Ranaut

இந்நிலையில் தான் பிரதமர் மோடி வீரபத்ரசாமி கோவிலில் தரிசனம் செய்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இந்த போட்டோவை நடிகை கங்கனா ரணாவத் பார்த்தார். இதையடுத்து அவர் பிரதமர் மோடியின் போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அதில் பிரதமர் மோடியின் கண்கள் குறித்து தெரிவித்த கருத்து கவனம் பெற்றது.

இதுதொடர்பாக கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரதமர் மோடி நம்மில் ஒருவர் என்பதை நாம் அனைவரும் அறிந்து இருக்கிறோம். ஆனால் நம்மில் இருந்து அவரை வேறுபடுத்தி வித்தியாசமாக காட்டுவது எது? இதில் எனது கருத்து என்னவென்றால் அவரது நோக்கம் மற்றும் செயலின் தீவிரத்தன்மை தான். இந்த படத்தில் அவரது கண்களை பாருங்கள். அது பளபளக்கும் வாளைவிட கூர்மையாகவும், பிரகாசமாகவும் இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+