பிஎன்ஜி இணைப்பு வச்சிருக்கீங்களா.. இனி எல்பிஜி சிலிண்டர் இல்லை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு
டெல்லி: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த போர் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது அந்த நாடுகளில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் குழாய் எரிவாயுவான பிஎன்ஜி இணைப்பு உள்ளவர்கள், எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சமையல் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடல், உணவு பட்டியல் குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். (LPG cylinder)
எல்பிஜி விநியேகம் சீராக உள்ளது. அச்சத்தின் காரணமாக ஒரே நாளில் 88 லட்சம் பேர் முன் பதிவு செய்துள்ளனர். வீட்டு பயன்பாடு முன் பதிவுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். தேவைக்கு மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும். தேவையற்ற முன்பதிவுகளை தவிர்க்க வேண்டும். பதுக்கல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
பிஎன்ஜி குழாய் எரிவாயு
இந்நிலையில் குழாய் எரிவாயு (PNG) இணைப்பு உள்ளவர்கள், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. "இதன் மூலம் வீட்டு உபயோக சிலிண்டர்களை வைத்திருக்கவோ, புதிய ரீஃபில் முன்பதிவு செய்யவோ முடியாது. மேலும் எல்பிஜி சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் பிஎன்ஜி வாடிக்கையாளர்கள், தங்களது இணைப்பை உடனடியாக கியாஸ் விநியோக நிறுவனங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications