ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்த நீரிணையை தாண்டி 2 எல்பிஜி கப்பல்கள் இந்தியா வந்திருக்கின்றன. ஆனால், இந்த எல்பிஜி அளவு போதுமானது கிடையாது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.

'ஜக் வசந்த்' மற்றும் 'பைன் கேஸ்' என்கிற 2 கப்பல்கள் இந்தியாவுக்கு வந்திருக்கின்றன. இந்த கப்பல்கள் மூலம் மொத்தம் 75,000 மெட்ரிக் டன் எல்பிஜி வந்திருக்கிறது.

LPG Vessels

கப்பல்களின் கொள்ளளவு

ஜக் வசந்த் கப்பல், VLGC ரகத்தை சேர்ந்தது. அதாவது மிகப்பெரிய கேஸ் ஏற்றி வரும் கப்பல் என்று அர்த்தம். இந்த ஒரு கப்பலில் மட்டும் சுமார், 44,000-50,000 மெட்ரிக் டன் எல்பிஜியை சுமந்து வர முடியும்.

இதைவிட அளவில் கொஞ்சம் சிறிய கப்பல்தான் பைன் கேஸ். இது 25,000-30,000 மெட்ரிக் டன் வரை எல்பிஜியை சுமந்து வரும். இப்படியாக இரண்டு கப்பல்களும் சேர்ந்துக்கொண்டு 75,000 மெட்ரிக் டன் எல்பிஜியை கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன.

எத்தனை நாட்களுக்கு போதுமானது?

வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர்கள் 14.2 கிலோ எடை கொண்டவை. அப்படியெனில், கப்பலில் கொண்டு வந்த எல்பிஜியை வைத்து சுமார் 52 லட்சம் சிலிண்டர்களை நிரப்ப முடியும். இந்தியாவை பொறுத்தவரை, ஒரு நாளைக்கு 80,000-90,000 மெட்ரிக் டன் எல்பிஜி தேவை. அந்த வகையில் தற்போது வந்திருக்கும் எல்பிஜி வெறும் ஒரு நாளைக்கு மட்டுமே போதுமானது. அதுவே தமிழ்நாடு என்று எடுத்துக்கொண்டால் 7 நாட்களுக்கு போதுமானது.

இந்தியாவின் பிரச்சனை

இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசு செய்த பெரிய தவறு.. எல்பிஜியை சேமிக்க இடத்தை உருவாக்காததுதான். நம் நாட்டில் கச்சா எண்ணெய்யை சேமிக்க இடம் இருக்கிறது. ஆனால் எல்பிஜியை சேமிக்க பெரிய இடங்கள் இல்லை. இதனால், நிச்சயம் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்தள்ளனர். அதற்கு முன்னர் உஷாராகி, வெவ்வேறு நாடுகளிலிருந்து எல்பிஜியை இறக்குமதி செய்தால் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+