நீட் விவகாரம்: "வாடகை வீட்டில் இருந்து கொண்டு, ஓனர் சொல்வதை கேட்பதில்லை.." விளாசி தள்ளிய மதுரை எம்பி
டெல்லி: நீட் விலக்கு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் ஆளுநரை விமர்சிக்கும் வகையில் பேசினார்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் கடந்த செப். மாதம் தமிழக சட்டசபையில் முழு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. சுமார் 6 மாதங்களாக இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்தார்.
இந்தச்சூழலில் கடந்த வியாழக்கிழமை, ஆளுநர் ஆர்.என். ரவி நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சு வெங்கடேசன்
இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வரும் நிலையில், மக்களவையிலும் தமிழக எம்பிகள் இது தொடர்பாக கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்ட பல எம்பிகள் தங்கள் எதிர்ப்புகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு வெங்கடேசன் ஆளுநரைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பேசினார்

வாடகை வீடு
இது தொடர்பாக அவர் பேசுகையில், குடியரசுத்தலைவர் தனது உரையில் உரிமைகளையும், கடமைகளையும் பற்றி விளக்கியிருந்தார். அதுசார்ந்த கருத்துக்களை நான் பதிவிட நினைக்கிறேன். நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். எனது வீட்டின் உரிமையாளருக்கென்று உரிமைகளும் கடமைகளும் உண்டு. வீட்டின் நிலமும் கட்டிடமும் அவருடைய சொத்து. அவரது உரிமையில் நான் தலையிடுவதில்லை. அந்த உரிமையை மதிக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார்
என்னைப் போலவே தமிழகத்தில் ஒருவர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். ஆனால் அவர் வாடகை செலுத்துவதில்லை. அவருக்குச் சட்டம் அந்த சலுகையை வழங்கியுள்ளது. ஆனால் அவரோ வீட்டின் உரிமையாளரின் உரிமையை நிராகரிக்கிறார். உரிமையாளரின் தீர்மானத்தைத் திருப்பி அனுப்புகிறார். நான் யாரைப்பற்றிக் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

மக்களாட்சி
குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கவும், ரத்துசெய்யவும் அதிகாரம் கொண்ட ஒருவர் மக்களாட்சியின் அதிகாரத்தைக் குறைக்கவும், ரத்து செய்யவும் முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. ஆறரை கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட அவையின் தீர்மானத்தைத் திருப்பி அனுப்புவதும், "ஏழை மக்களின் கல்வியைப் பாதிக்கும் தீர்மானம்" என்று கருத்து கூறுவதும் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவதாகும்.

தமிழகத்தின் குரல் ஓயப்போவதில்லை
நீட் தேர்வுக்கு எதிராக இந்த அவையில் நாங்கள் விடாது குரல் எழுப்பிக்கொண்டேயிருக்கிறோம். எங்கள் குரலுக்கு நீங்கள் மதிப்பளிப்பதேயில்லை. ஆனாலும் தமிழகத்தின் குரல் ஓயப்போவதில்லை. டிசம்பர் மாதம் காசியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் காசியைப் பற்றிக் கூறும் போது, "காசியை வெறும் வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடியாது. உணர்வுகளின் மூலமே வெளிப்படுத்த முடியும், அங்கு உண்மையே பண்பாடு, அன்பே பாரம்பரியம்" என்று கூறினார். பிரதமரின் அதே வார்த்தைகளால் இந்த அவையில் நான் பதிவு செய்கிறேன். தமிழகத்தை வெறும் வரைபடத்தைப் பார்த்து நீங்கள் புரிந்து கொள்ள முடியாது.

3000 ஆண்டுகள்
மூவாயிரமாண்டு முற்போக்கு பாரம்பரியமும், சமத்துவ சிந்தனையும், சமூக நீதி கோட்பாடும் விளைந்த நிலம் அது. அந்த நிலத்திலிருந்து தொடர்ந்து எதிரொலிக்கும் குரலை நீங்கள் நசுக்கி இன்பம் காண்கிறீர்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் கூட மாநிலத்தின் பிரதிநிதிகள் டெல்லி அதிகாரிகளைச் சந்திக்க பத்து நாட்கள் காத்திருந்ததாக நான் படித்ததில்லை. ஆனாலும் காத்திருந்து நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
Recommended Video

வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள்
கேட்பதால் எங்களை அதிகாரமற்றவர்களாகவும், தருவதால் உங்களை அதிகாரம் படைத்தவர்களாகவும் நீங்கள் கருதிக் கொள்கிறீர்கள். கேட்பதும் ஏற்பது ஒரு உரையாடலின் இருபகுதிகள். மாநிலமும் ஒன்றியமும் சம அதிகாரம் கொண்ட இரண்டு தட்டுக்கள். அதைத்தான் அரசியல் சாசனம் சொல்கிறது. அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். எங்களின் குரல் ஒரு மாநிலத்தின் குரலல்ல, இந்திய மாநிலங்களின் குரல். இந்திய அரசியல் சாசனத்தின் குரல், அதற்குச் செவிசாயுங்கள், செவிசாய்க்க மறுப்பவரை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள்" என்று அவர் பேசினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications