Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பமேளா கூட்டம்: மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் வாரணாசியில் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச மகா கும்பமேளா காரணமாக வாரணாசி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், கங்கா - காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகம் திரும்ப இருந்த தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் ஏற முடியாமல் சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது. வீரர்கள் உதவி கேட்ட நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவுப்படி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் வீரர்களை விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 13 ஆம் தேதி பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பதால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் சென்று திரிவேணியில் புனித நீராடி வருகிறார்கள். இதுவரை 55 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக கூறப்படுகிறது.

Rail Varanasi Maha Kumbh Mela

தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், பிரயாக்ராஜ் நகரமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்திருந்தாலும், சாலை மார்க்கமாகவும், ரயிலிலும் லட்சக்கணக்கான மக்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ரயில்களில் அதிகம் பேர் வருவதால் பல்வேறு ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

ரயிலில் ஏசி கோச்சில் புக் செய்து வந்தால் கூட அந்த இருக்கைக்கு செல்ல முடியவில்லை என்பது பயணிகள் குற்றச்சாட்டாக உள்ளது. அண்மையில் டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், வாரணாசி ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் ஏற முடியாமல் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வீரர்கள் சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது.

மகா கும்பமேளாவில் பங்கேற்க அதிகளவில் பயணிகள் இருந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ரயிலின் ஏசி பெட்டியில் புக் செய்திருந்தபோதிலும் தமிழக வீரர்களால் ரயிலில் ஏற முடியவில்லை. இதனால் வாரணாசி ரயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் சிக்கி தவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 6 பேர் உள்பட மொத்தம் 11 பேர் ரயில் ஏற முடியவில்லை என்றும், இது குறித்து தமிழக அரசுக்கு உதவி கேட்டதும் தெரியவந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியானது வாரணாசியில் நடைபெற்றது. இதில் தென்னிந்தியா அணி சார்பில் தமிழக வீரர்கள் 6 பேர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் இன்று நள்ளிரவு 1 மணியளவில் வாரணாசி ரயில் நிலையம் வந்தனர். அப்போது பயங்கர கூட்ட நெரிசல் இருந்துள்ளது. கங்கா - காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டியில் புக் செய்திருந்தனர். இந்த ரயிலில் சென்னை திரும்ப இருந்த நிலையில் கூட்ட நெரிசலால் ரயிலில் ஏற முடியாத சூழல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் இது தொடர்பாக மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், துணை முதல்வர் உத்தரவின் பேரில் தமிழக வீரர்கள் விமானம் மூலமாக வருகை தர இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் வீரர்களை விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள், தமிழக அரசுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழக கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் ஏற முடியாமல் வாரணாசி ரயில் நிலையத்தில் சிக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+