மே 30ல் இந்தியா - பாகிஸ்தான் போர்? மகாபாரதத்தை குறிப்பிட்டு முன்பே கணித்த ஜோதிடர்.. பரவும் வீடியோ
டெல்லி: மே 30ம் தேதி ஒரே சமநிலையில் 6 கிரகங்கள் வருகின்றன. இது மகாபாரத போரின் போது நடந்த நிகழ்வாகும். இதனால் மே 30ல் மகாபாரதத்தில் வருவது போல் இன்னொரு போர் வெடிக்கலாம் என்று பிரபலமான ஜோதிடர் சுவாமி யோகேஷ்வரானந்தா கிரி முன்கூட்டியே கணித்து பேசிய வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த மோதல் மே 30ம் தேதி போராக வெடிக்கிறதா? என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பஹல்காம் தாக்குலை தொடர்ந்து நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. நம் நாடு நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. நேற்று முன்தினம் பாகிஸ்தானில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்றது. அதனை நம் வான்வெளி ஏவுகணை தடுப்பு கருவிகள் தடுத்து நிறுத்தி வானிலேயே அழித்தது. இதன்மூலம் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது. தற்போது ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கும் நம் படைகள் உரிய முறையில் தக்க பதிலடியை வழங்கி வருகிறது.
இதனால் தற்போது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் பிரபலமான ஜோதிடர் சுவாமி யோகேஷ்வரானந்தா கிரியின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் மே மாதம் 30ம் தேதி மகாபாரதத்தில் வருவது போல் போர் வெடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதாவது ஜோதிடர் சுவாமி யோகேஷ்வரானந்தா கிரி தி ரன்வீர் ஷோ இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்தார்.
அப்போது அவர், ‛‛மே மாதம் 30ம் தேதி வானில் உள்ள கிரகங்கள் சமநிலையாக வர உள்ளன. 6 கிரகங்கள் சமநிலைக்கு வருவது என்பது கடந்த காலங்களில் மகாபாரதம் அல்லது கடந்த காலங்களில் நடந்த பெரிய போர்களின்போது காணப்பட்ட நிகழ்வாகும்.போர் என்பது ஒரு வகையான யாகம். யக்ஞம் என்பது தியாகம். கீதையின் 18 வது அத்தியாயத்தில் இதுபற்றி கிருஷ்ணர் கூறியுள்ளார். யக்ஞம், தானம் மற்றும் தவங்களை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் போரின் சாத்தியத்தை வெறும் அழிவாக கருத கூடாது. மாறாக பிரபஞ்சத்தின் மறுசீரமைப்பாக கருத வேண்டும்.
இந்த வெறும் கணிப்பு அல்ல. அறிவியல் ரீதியிலான விளைவாகும். மேலும் இந்த காலத்தை இந்தியாவுக்கான பொற்காலம் என்று சொல்வோம். முற்றிலும் உச்சத்தில் உள்ளது. இந்தியா ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாறும். இந்தியா வீட்டோ அதிகாரத்துடன் ஐநா சபைக்கு செல்லும். இந்தியா மிக விரைவில் ஐநாவின் முன்னணி பதவியை பெறும் இதனை அரவிந்தர் (ஆன்மிகவாதியாகவும், கவிஞராகவும் இருந்தவர்), விவேகானந்தர் கூறியுள்ளனர். நம்முடைய விஞ்ஞானியாகவும், ஜனாதிபதியாகவும் இருந்த அப்துல் கலாம் கூறியுள்ளனர். அவர் அறிவியல் பூர்வமாக உணர்ந்து கூறினார்'' என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ என்பது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றம் என்பது மே மாத தொடக்கத்தில் உச்சமடைந்துள்ளது. இதற்கிடையே ஜோதிடர் சுவாமி யோகேஷ்வரானந்தா கிரி கூறி மே 30ம் தேதியும் விரைவில் வர உள்ள நிலையில் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் பதற்றம் என்பது தணியாமல் அவர் கூறியது போல் பெரிய போராக மாறுமோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications