டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி தலைமையில் மொத்த நிர்வாகமும் சீர்குலைந்தது.. ராகுல் காந்தி

டெல்லியில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மெகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் ? எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு !

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் அரசு நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநரே தாக்குப் பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    டெல்லியில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கடுமையான முயற்சியின் காரணமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

    டெல்லியில் நடந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

    என்ன மீட்டிங்

    என்ன மீட்டிங்

    இந்த சந்திப்பு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதம் செய்வதற்காக நடைபெற்றது.. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளன. 2019ல் பாஜகவிற்கு எதிராக இந்த கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன.

    எந்தெந்த கட்சிகள்

    எந்தெந்த கட்சிகள்

    இந்த கூட்டத்தில் முக்கியமான எதிர்க்கட்சிகள் பல கலந்து கொண்டன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், திமுக, ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்ற மாநில கட்சிகள் இதில் கலந்து கொண்டன.

     கலந்து கொள்ளாதது

    கலந்து கொள்ளாதது

    இந்த சந்திப்பில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கலந்து கொள்ளவில்லை. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் பிஜு ஜனதா தளம் கட்சியும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் அதிமுக போன்ற மாநில கட்சிகள் சிலவும் கலந்து கொள்ளவில்லை.

     ஸ்டாலின்

    ஸ்டாலின்

    இந்த சந்திப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றுவிட்டார். ஏற்கனவே திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

     தலைவர்கள் யார்

    தலைவர்கள் யார்

    மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின், சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, கனிமொழி, சரத்பவார், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், இன்னும் சில முன்னாள் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர்.

     யார்?

    யார்?

    இந்த சந்திப்பில் இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதுதொடர்பாக பின்னர் விவாதிக்க கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

     ராகுல் காந்தி பேட்டி

    ராகுல் காந்தி பேட்டி

    கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலா ஆட்சியில் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. சிபிஐ, ஆர்பிஐ என எல்லாவற்றிலும் பிரச்சினை, இப்போது உர்ஜித் படேலே விலகிப் போய் விட்டார் என்று குற்றம் சாட்டினார்.

    English summary
    Mahagathbandhan Meet: The high-level meeting of oppositions to held today in Delhi. DMK leader Stalin will participate in the meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X