மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்.. கருத்து கணிப்புகள் என்னவாகும்? நாளை வாக்கு எண்ணிக்கை- ஏற்பாடுகள் தீவிரம்!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இரு மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 15 மாவட்டங்களில் 43 தொகுதிகளில் நவம்பர் 13-ல் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில் மொத்தம் 64.85% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து 12 மாவட்டங்களின் 38 தொகுதிகளில் நவம்பர் 20-ல் 2-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 67.59% வாக்குகள் பதிவாகி இருந்தன.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 29,563 வாக்குச் சாவடிகளில் பதிவான அனைத்து வாக்குகளும் மொத்தம் 23 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட உள்ளன.
இதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 66.05% வாக்குகள் பதிவாகி இருந்தன. மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை எண்ணப்பட உள்ளன.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும். இதனையடுத்து 30 நிமிடங்களுக்கு ஒரு முறை முடிவுகள் தொடர்ந்து வெளியாகும்.
இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியை தக்க வைக்கும் எனவும் சில எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இரு மாநிலங்களிலும் தொங்கு சட்டசபைக்கும் சாத்தியம் இருப்பதாகவும் ஓரிரு எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications