மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் 2024 LIVE: ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா ஆலோசனை.. முதல்வர் யார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் மத்திய அமைச்சர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மை தோல்வியைத் தழுவினர்.

election results 2024  maharashtra assembly election 2024  jharkhand assembly election 2024  by poll election 2024

11:03 PM, 24 Nov

சிவசேனா குழு தலைவராக ஷிண்டே தேர்வு!

சிவசேனா கட்சித் தலைவர் உதய் சமந்த், கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவை கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யும் தீர்மானத்தை முன்வைத்தார். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

10:53 PM, 24 Nov

நவம்பர் 28 ஆம் தேதி பதவியேற்பு

“காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டம் நடந்தது, இதில், சட்டமன்ற கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க கட்சித் தலைமைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஹேமந்த் சோரன் முதல்வராக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவளித்தனர். அதன் பின் அவர் சென்று கவர்னரை சந்தித்தார். நவம்பர் 28 ஆம் தேதி புதிய அரசு அமையும்” என ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர் தெரிவித்துள்ளார்.

10:33 PM, 24 Nov

ஷிண்டே தலைமையில் சிவசேனா ஆலோசனை கூட்டம்

சிவசேனா கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்றுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 57 இடங்களில் வென்றது. மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

10:28 PM, 24 Nov

இப்போது தோற்றோம்.. பீகாரில் நிச்சயம் வெல்வோம்- தேஜஸ்வி

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆர்ஜேடி தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “ஜார்க்கண்டில் நாங்கள் வெற்றி பெற்றோம், மகாராஷ்டிரா ரிசல்ட் குறித்து ஆராயப்படும். வரவிருக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

8:35 PM, 24 Nov

தேவேந்திர பட்னாவிஸுடன் முன்னாள் டிஜிபி சந்திப்பு

மகாராஷ்டிர மாநில முன்னாள் டிஜிபி ரஷ்மி சுக்லா, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

8:08 PM, 24 Nov

சட்டமன்ற கட்சி தலைவராக அஜித் பவார் தேர்வு

தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது.

6:46 PM, 24 Nov

இதுபோன்ற முடிவை கண்டதில்லை - சரத் பவார்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாகப் பேசியுள்ள தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி) தலைவர் சரத் பவார், "பல ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிறோம். இதுபோன்ற அனுபவத்தை நாங்கள் சந்தித்ததில்லை. ஆனால் இப்போது கிடைத்துள்ள முடிவைப் புரிந்துகொண்டு, சரிசெய்வோம். மீண்டும் மக்கள் முன்பு புதிய உற்சாகத்தோடு செல்வோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு யணித்துள்ளேன். எனது கட்சியாக இருந்தாலும், சிவசேனாவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, எங்குமே ஒருங்கிணைப்பில் குறைபாடுகள் இல்லை. தேர்தல் ரிசல்ட் நாங்கள் செய்த முயற்சிகளுக்கு ஈடாக வரவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

6:33 PM, 24 Nov

திட்டமிட்டபடி பிரச்சாரம் செய்யவில்லை

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளான சரத் பவாரின் என்சிபி (எஸ்பி) மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) திட்டமிட்டபடி பிரச்சாரம் செய்யத் தவறிவிட்டன என்று கர்நாடக அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

5:49 PM, 24 Nov

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். புதிய அரசு அமைப்பதற்காக ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். வரும் 28 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கும் விழா நடைபெறும் என்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

5:39 PM, 24 Nov

ஜார்க்கண்ட் ஆளுநரை சந்தித்த ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். வரும் 28 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

5:39 PM, 24 Nov

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள உத்தவ் மற்றும் சரத்பவார் ஆகிய இரு கட்சியினரும் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என காங்கிரசை சேர்ந்தவரும், கர்நாடக உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிரா தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவருமான பரமேஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

4:31 PM, 24 Nov

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். நாளை மறுநாள் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோர உள்ளார்.

2:23 PM, 24 Nov

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 233 தொகுதிகளில் பாஜகவின் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நாளை ஆட்சி அமைக்க மகாயுதி கூட்டணி தயாராகி வரும் நிலையில், இன்று பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தங்கள் கட்சியின் சட்டசபை குழு தலைவரை தேர்வு செய்ய உள்ளது.

1:25 PM, 24 Nov

ஜார்கண்ட் தேர்தலில் ஆளும் கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்ற போதிலும் 4 அமைச்சர்கள் தோல்வி அடைந்துதுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா, நீர்வளத்துறை அமைச்சர் மிதிலேஷ் தாகூர், கல்வித்துறை அமைச்சர் பத்யநாத் ராம், சமூக நலத்துறை அமைச்சர் பேபி தேவி ஆகிய 4 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.

1:25 PM, 24 Nov

ஜார்க்கண்டில் 18-50 வயதுடைய பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் துறையை வகிக்கும் பேபி தேவியே தோல்வி அடைந்து இருக்கிறார். ஜார்க்கண்டில் ஜேஎம்.எம். கூட்டணி வெற்றி பெற மகளிருக்கு வழங்கப்படும் நிதி உதவி திட்டம் முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், அந்த துறையின் அமைச்சரே தோல்வி அடைந்து இருப்பது ஜாரர்க்கண்ட் அரசியலில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

11:46 AM, 24 Nov

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணி நாளை ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், நாளைக்குள் கூட்டு முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா 14 வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் 26 ஆம் தேதியுடன் காலாவதி ஆவதால் அதற்குள் புதிய அரசு அமைக்கப்படுகிறது.

11:00 AM, 24 Nov

மகராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்தவர்தான் முதல்வராக வர வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்ப்பதாக அஷிஷாரோ தேஷ்முக் கூறியுள்ளார். சவ்னேர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அஷிசாரோ தேஷ்முக் கூறியதாவது:- 'மகாராஷ்டிரா மக்கள் பாஜகவுடன் இருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியை பெற்றிருக்கிறோம். கட்சியின் பார்லிமெண்ட்ரி குழு முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும். பாஜக தொண்டர்கள் எண்ணம் பற்றி பேசினால், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆக வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். பாஜகவில் இருந்துதான் முதல்வர் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்' என்றார்.

10:21 AM, 24 Nov

மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் 21 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 20 பேர் ஆளும் மகாயுதி கூட்டணியை சேர்ந்தவர்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்த ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

10:03 AM, 24 Nov

மகராஷ்டிராவில் 50:50 என்ற அடிப்படையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஷிண்டே தலைமையிலான சிவசேனா விருப்பம் தெரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது முதல் இரண்டறை ஆண்டுகளுக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், அடுத்த இரண்டறை ஆண்டுகளுக்கு பாஜகவுக்கு ஒதுக்கலாம் என சிவசேனா விரும்புகிறதாம். இதே கருத்தை பாஜக தலைமையிடமும் ஷின்டே தரப்பிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

9:49 AM, 24 Nov

காங்கிரஸ் கட்சி தோற்கும் போதெல்லாம், இவிஎம் இயந்திரம் மீது பழி போடும் என்று பாஜக விமர்சித்துள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூணவல்லா கூறுகையில், "தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எப்போது எல்லாம் தோற்கிறதோ.. அப்போது எல்லாம் தேர்தல் ஆணையம் அல்லது இவிஎம் மீது பழி போடும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஜார்க்கண்ட், வயநாடு , ஜம்மு காஷ்மீரில் கிடைத்த வெற்றி எல்லாம் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. ஆனால், மகாரஷ்டிராவில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் மனசாட்சியை அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்" என்றார்.

8:36 AM, 24 Nov

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் விரைவில் மீண்டும் பதவி ஏற்பு. பதவி ஏற்பு விழா இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

7:55 AM, 24 Nov

உத்தரப்பிரதேசம் குந்தர்கி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி இந்து வேட்பாளர் ஒருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 11 போட்டியாளர்களைத் தோற்கடித்து வென்றுள்ளார் . உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதியில் பாஜகவின் ராம்வீர் தாக்கூர் 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

7:42 AM, 24 Nov

மகாராஷ்டிரா தேர்தல்: சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி.

7:24 AM, 24 Nov

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வென்ற நிலையில் பாஜகவினர் இரவு முழுக்க கொண்டாட்டம்

6:36 AM, 24 Nov

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வென்ற நிலையில் பாஜக சார்பாக முதல்வர் தேர்வாக வாய்ப்பு

6:36 AM, 24 Nov

பாஜக சார்பாக தேவேந்திர பட்நாவிஸ் மீண்டும் முதல்வர் ஆக வாய்ப்பு

Top Fight - Dhanbad

image

ராஜ் சின்ஹா

Won

image

அஜய் குமார் துபே

Lost

Top Fight - Gandey

image

கல்பனா சோரன்

Won

image

முனியா தேவி

Lost

Top Fight - Ghatsila

image

ராம் தாஸ் சோரன்

Won

image

பாபுலால் சோரன்

Lost

Top Fight - Jamtara

image

இர்பான் அன்சாரி

Won

image

சீதா சோரன்

Lost

READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+