814 கிராமம்.. 2 பேருக்கும் உரிமையில்லை.. கர்நாடகா-மராட்டிய எல்லை மோதலில் அமித்ஷா ஸ்ட்ரீட்-கப்சிப்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 814 கிராமங்கள் தொடர்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே எல்லை பிரச்சனை உள்ளது. இது மோதலாக உருவான நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வார்னிங் கொடுத்தார். மேலும், எல்லை கிராமங்கள் தொடர்பாக உரிமை கொண்டாட கூடாது என அவர் ஸ்ட்ரீட்டாக கூறியதால் இருமாநில முதல்வர்களும் கப்சிப் ஆகினர்.

கர்நாடகாவும், மகராஷ்டிராவும் அண்டை மாநிலமாக உள்ளன. இந்த இருமாநிலங்களில் எல்லையில் பெலகாவி மாவட்டம் உள்ளது. மொழி வாரி மாநிலங்களாக கர்நாடகா உருவான போது பாம்பே பிரசிடென்சியில் இருந்த பெலகாவி கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது.

1957 முதல் பெலகாவி கர்நாடகாவுடன் உள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் உள்ள 800க்கும் அதிகமான கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் உள்ளனர்.

814 கிராமங்கள்

814 கிராமங்கள்

இந்நிலையில் தான பல ஆண்டுகளாக கர்நாடகா-மகாராஷ்டிரா இடையே எல்லை பிரச்சனை உள்ளது. கர்நாடகாவில் உள்ள மராத்தி மொழி பேசும் கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என அம்மாநில அரசு கூறி வருவது தான் எல்லை பிரச்சனைக்கு காரணமாக உள்ளது. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள மொத்தம் 814 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என அம்மாநில அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வழக்குக்கு நடுவே மோதல்

வழக்குக்கு நடுவே மோதல்

இந்த இருமாநில எல்லை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அவ்வப்போது இருமாநிலங்களிலும் எல்லை தொடர்பான விவாதங்கள் எழுந்து பிரச்சனைகளை உருவாக்கும். அதன்படி கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா, கர்நாடகா இடையே மீண்டும் எல்லை பிரச்சனை வெடித்துள்ளது. பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் மகாராஷ்டிரா பதிவெண் கொண்டு வாகனங்களை சேதப்படுத்தினர். அதேபால் மகாராஷ்டிராவில் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனால் இரு மாநிலங்கள் இடையே தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வரருகிறது.

அமித்ஷா தலையீடு

அமித்ஷா தலையீடு

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக, அதிருப்தி சிவசேனா அணியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதனால் எல்லை பிரச்சனையில் மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி இருமாநில முதல்வர்களையும் டெல்லிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடகா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டவர்கள் நேற்று டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர். இதன்மூலம் கர்நாடகா-மகாராஷ்டிரா இடையேயான எல்லை பிரச்சனையில் முதல் முதலாக மத்திய அரசு தலையீட்டுள்ளார். இந்த வேளையில் அமித்ஷா பல்வேறு விஷயங்களை அவர்களிடம் தெரிவித்தார்.

அமித்ஷா கொடுத்த அட்வைஸ்

அமித்ஷா கொடுத்த அட்வைஸ்

இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க 6 அமைச்சர்கள் அடங்கிய குழுவை இரு மாநிலங்களும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எல்லை பிரச்சினை என்பது அரசியல் சாசனத்தின் படியே தீர்க்க வேண்டும் என்றும் வீதிகளில் வைத்து தீர்க்க முடியாது எனவும் அறிவுறுத்தினார். அதன்படி இருமாநிலத்தின் எல்லை பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இதற்காக இருமாநில அமைச்சர்கள் அடங்கிய 6 பேர் குழுவை அமைக்க வேண்டும். அரசியலமைப்பின் அடிப்படையில் தான் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதற்கு இருமாநிலங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும் என அட்வைஸ் வழங்கினர்.

 யாரும் உரிமை கோர முடியாது

யாரும் உரிமை கோர முடியாது

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமித்ஷா கூறுகையில், ‛‛மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பது பற்றி பேசப்பட்டுள்ளது. பாசிட்டிவ்வாக இருமாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசியலமைப்பு ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை 2 மாநிலங்களும் எந்த பகுதிகளுக்கும் உரிமை கோர முடியாது.

ஐபிஎஸ் தலைமையில் கமிட்டி

ஐபிஎஸ் தலைமையில் கமிட்டி

கர்நாடகாவில் இருந்து 3 அமைச்சர்கள், மகாராஷ்டிராவில் இருந்து 3 அமைச்சர்கள் என 6 பேர் குழு அமைக்கப்பட்டு இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தும். இருமாநிலங்கள் இடையேயான பிற பிரச்சனைகளையும் இந்த அமைச்சர்கள் குழு பேசி தீர்வு காணும். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட முடிவு எடுக்க நாம் தற்போது அமைக்கப்படும் அமைச்சர்கள் குழுவின் பேச்சுவார்த்தை மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். மேலும் எல்லையில் அமைதியை நிலைநாட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி உருவாக்கப்படும். மேலும் தற்போதைய முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகியோர் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார். தற்பாது இருமாநில எல்லை விஷயத்தில் அமித்ஷா தலையிட்டுள்ளதால் வரும் நாட்களில் பிரச்சனை இன்றி அமைதி நிலவும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+