பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா? விதிகளில் மேஜர் மாற்றம்.. மறக்காமல் இதை நோட் பண்ணுங்க
டெல்லி: நமது நாட்டில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு பாஸ்போர்ட் செயல்முறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது புதிய மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்போது நமது நாட்டில் இருந்து பலரும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இதுபோன்ற வெளிநாட்டுப் பயணங்களுக்கு பாஸ்போர்ட் என்பது அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இதற்கிடையே பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. இப்போது புதிய மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் விதிகள் மாற்றம்
அதாவது இதுநாள் வரை ஒருவர் தங்கள் பாஸ்போர்ட்டில் கணவர் அல்லது மனைவி பெயரைச் சேர்க்க வேண்டும் என்றால் திருமண சான்றிதழை உடன் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி திருமண சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே கணவர் அல்லது மனைவி பெயரைச் சேர்க்க முடியும் என்ற விதி இருந்தது. இப்போது அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் திருமணச் சான்றிதழ் இல்லாமலேயே ஒருவர் தங்கள் பாஸ்போர்ட்டில் கணவர் அல்லது மனைவியின் பெயரைச் சேர்க்க முடியும். இணைப்பு J கீழ் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோ ஒரு ஆதாரமாக ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் தங்கள் மனைவியின் பெயரைச் சேர்க்க இனி திருமணச் சான்றிதழை வழங்க வேண்டிய அவசியமில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. திருமணமான தம்பதிகள் பாஸ்போர்ட்டில் மாற்றங்களைச் செய்யும்போது ஏற்படும் சுமையைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சொல்வது என்ன
இது தொடர்பாக புனேவின் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி அர்ஜுன் தியோர் கூறுகையில், "இதுநாள் வரை கணவர் அல்லது மனைவி பெயரைச் சேர்க்கத் திருமண சான்றிதழ் கட்டாயம் என்ற விதி இருந்தது. ஆனால், இப்போது அதற்குப் பதிலாக இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ போதும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரும் கையெழுத்திட்ட போட்டோ என்பது இணைப்பு Jஇல் ஏற்றுக் கொள்ளப்படும்" என்றார்.
என்ன காரணம்
இந்தியாவைப் பொறுத்தவரைத் திருமண பதிவு நடைமுறைகள் என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதாலேயே இது செய்யப்பட்டதாக மூத்த பாஸ்போர்ட் துறை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார். உதாரணமாக, தமிழகத்தில் திருமணங்கள் வழக்கமாக சட்டப்படி பதிவு செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பாலான வட மாநிலங்களில் பலரும் தங்கள் திருமணங்களைப் பதிவு செய்வதில்லை. இதனால் அவர்கள் பாஸ்போர்ட்டில் பெயரைச் சேர்க்க முயலும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
இந்த பிரச்சினையைக் கருத்தில் கொண்டே வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திருமண சான்றிதழுக்குப் பதிலாக இருவரும் இணைந்து எடுத்துக் கொண்டே போட்டோ போதும். அதேநேரம் அதில் இருவரது கையெழுத்தும் இருக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இணைப்பு Jக்கு தம்பதியினர் செய்ய வேண்டியவை:
- பெயர்கள், முகவரி மற்றும் திருமணம் குறித்துக் குறிப்பிடவும்.
- தம்பதிகளாக ஒன்றாக வாழ்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- தம்பதிகள் ஒன்றாக இருக்கும் படம் தேவை.
- இருவரும் தேதியிட்டு அதில் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்.
அத்தோடு அதில் இருவரது ஆதார் எண்கள், வாக்காளர் அடையாள அட்டை எண்கள் மற்றும் இருவரும் பாஸ்போர்ட் வைத்திருந்தால் அந்த இரு நம்பர்களையும் எழுதித் தர வேண்டும். இருவரும் சேர்த்து எடுக்கப்பட்ட புகைப்படத்தோடு இந்த அனைத்து தகவல்களும் இருந்தால் மட்டுமே இணைக்கப்படும் என்று பாஸ்போர்ட் அதிகாரி அர்ஜுன் தியோர் தெரிவித்தார்.
மேலும், யாராவது தங்கள் பாஸ்போர்ட்டில் இருந்து வாழ்க்கைத் துணைவரின் பெயரை நீக்க விரும்பினால், அவர்கள் செல்லுபடியாகும் சட்ட ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியது. அதேபோல விவாகரத்து அல்லது இணையர் மரணம் காரணமாகப் பெயர் நீக்க விரும்புவது, விவாகரத்து செய்து கொண்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்யும்போது அவரது பெயரைச் சேர்ப்பது உள்ளிட்ட பிராசஸ்களுக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது..
அதன்படி பாஸ்போர்ட்டில் இணையர் பெயரை நீக்கக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சான்றுகளில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- விவாகரத்து உத்தரவு
- வாழ்க்கைத் துணைவரின் இறப்புச் சான்றிதழ்
- மறுமணச் சான்றிதழ் அல்லது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ (இணைப்பு J)
இந்த ஆவணங்கள் இருந்தாலே மறைந்த அல்லது விவாகரத்து பெற்ற இணையரின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு, புதிய இணையரின் பெயரை சேர்க்க முடியும். பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் பிராசஸை எளிமையாக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications