Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவர் குறித்த சீக்ரெட்டை ட்வீட் செய்த மலாலா.. poll வைத்து கருத்து கேட்ட அஸ்ஸர் மாலிக்

சோபாவில் கணவர் கழற்றி போட்ட அழுக்கு சாக்ஸ் குறித்து மலாலா கூறிய கருத்துக்கு அவரது கணவர அஸ்ஸர் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த பெண் உரிமை போராளியான மலாலா தனது கணவர் செய்த செயல் குறித்து poll ஒன்றை நடத்தியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள நிலம் ஸ்வாத் பள்ளித்தாக்கு. இது ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இந்த பள்ளத்தாக்கு 2007ஆம் ஆண்டு முதல் தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. இவர்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் எடுக்கும் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

அங்கு பெண்களின் தார்மீக உரிமைகள் பறிக்கப்பட்டது. தனது கணவர் மற்றும் சகோதரர்கள் தவிர வேறு யாருடனும் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. பள்ளிக் கூடம் செல்ல பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்டதோடு ஒரே நாளில் 400 பெண்கள் பள்ளிக் கூடங்களள் இழுத்து மூடப்பட்டன. இவை அனைத்தையும் செய்தது தலிபான் தீவிரவாத அமைப்பு.

12 வயதான மலாலா

12 வயதான மலாலா

அப்போது 12 வயதேயான மலாலா எனும் பள்ளிச் சிறுமி பிபிசி உருது இணையதள வலைப்பூவில் தலிபான்களின் அராஜகம் பற்றி எழுதத் துவங்கினார். குல் மக்காய் அதாவது சோளப்பூ என்ற புனைப்பெயரில் 2009 ஆம் ஆண்டு மலாலா எழுத தொடங்கிய போது தோளில் தட்டி உற்சாகப்படுத்தியவர் அவருடைய தந்தை யூசுப்தீன் யூசுப்சாய். அவரும் தலிபான்களை எதிர்த்து பெண்களுக்கான பள்ளியொன்றை நடத்தினார்.

வலைப்பதிவு

வலைப்பதிவு

தலிபான்கள் குறித்து மலாலா ஒரு வலைப்பதிவில் " பலர் பேயை பார்த்து பயப்படுவார்கள், சிலர் சிலந்திப்பூச்சியை பார்த்து அஞ்சுவது உண்டு. ஆனால் நாங்களோ மனிதர்களைப் பார்த்து பயந்தோம். ஏனெனில் அவர்கள் காட்டுமிராண்டிகள்" என கூறியிருந்தது உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. மலாலா தொடங்கிய பள்ளியில் பலரும் தலிபான்களுக்கு பயந்து படிப்பை கைவிட்டாலும் மலாலாவும் அவரது தோழிகள் 11 பேரும் தொடர்ந்து பள்ளி செல்வதை கைவிடுவதாக இல்லை.

ஆசிட் வீச்சு

ஆசிட் வீச்சு

ஆசிட் வீச்சு அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் கூட பொருட்படுத்தாமல் புத்தகங்களை பர்தாவுக்குள் மறைத்துக் கொண்டு பள்ளி சென்றார் மலாலா. அவரது இலக்கு ஒன்றே ஒன்றுதான் கல்வி. இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி வழக்கம் போல பள்ளி முடிந்தது. மலாலாவும் சக மாணவிகள் சிலரும் வீட்டிற்குச் செல்லும் பேருந்தில் மலாலா பயணித்தார். அந்த பேருந்து வழியில் ஒரு இடத்தில் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது. பேருந்தின் உள்ளே ஏறிய தலிபான் தீவிரவாதி ஒருவன் மலாலாவை சரமாரியாக சுட்டார். இதில் மலாலாவின் கழுத்திலும் தலையிலும் தோட்டா பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

மலாலா ராவல்பிண்டி

மலாலா ராவல்பிண்டி

இதையடுத்து மலாலா ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் பாகிஸ்தான் அரசு இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாமின் எலிசபெத் மருத்துவமனைக்கு மலாலாவை அனுப்பியது. பாகிஸ்தான் அரசு மலாலாவை காப்பாற்ற துடித்ததன் காரணம், இவ்வளவு சிறிய வயதிலும் தலிபான் தீவிரவாதிகளின் முன் மலாலா காட்டிய துணிச்சலும் பாகிஸ்தானின் அமைதிக்காகவும் பெண்களின் உரிமைக்காகவும் தனது 11 வயது முதலே அவர் குரல் கொடுத்து வந்ததும் தான்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு பீனிக்ஸ் பறவையாக எழுந்து பறந்தார் குல் மக்காய் மலாலா. தொடர்ந்து 6 ஆண்டுகள் அவரால் பாகிஸ்தான் திரும்ப முடியவில்லை. எனினும் சொந்த மண்ணின் நினைவுகளைச் சுமந்தபடியே இங்கிலாந்தில் தனது படிப்பை தொடர்ந்தார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் அஸ்ஸர் மாலிக்கிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது ஒன்றாக வசித்து வரும் நிலையில் மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அந்த பதிவில் சோபாவில் பழைய சாக்ஸ் ஒன்று கிடந்தது. அஸ்ஸரிடம் இது உங்களுடையதா? என கேட்டேன். அவர் ஆமாம், அது அழுக்காக இருக்கிறது. அதனை வெளியே தூக்கி எறிய வேண்டும் என சொன்னார். நான் அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலான நிலையில் மலாலாவின் கணவர் அஸ்ஸர் தனது ட்விட்டர் பக்கத்தில் poll ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.

சாக்ஸ் அழுக்கு

சாக்ஸ் அழுக்கு

அதில் சாக்ஸ் அழுக்காக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி இரண்டு ஆப்ஷன்களையும் கொடுத்திருந்தார். முதலாவதாக வெளியே தூக்கி எறிய வேண்டும் எனவும் இரண்டாவதாக குப்பைத் தொட்டியில் போட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மலாலா செய்தது சரிதான். வீட்டு வேலைகளை கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்தே மேற்கொள்ள வேண்டும். திருமண வாழ்க்கையில் இணைந்த பிறகு தம்பதிகள் சந்திக்கும் முதல் சிக்கல் இப்படித்தான் இருக்கும் என நெட்டிசன்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+