காமராஜர், நிஜலிங்கப்பா வரிசையில் மல்லிகார்ஜூன கார்கே... காங்கிரஸ் தலைவராகும் 10-வது தென்னிந்தியர்!
டெல்லி: காமராஜர், நிஜலிங்கப்பா வரிசையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகும் 10-வது தென்னிந்தியர் மல்லிகார்ஜூன கார்கே.
காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட்னா.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10-வது தென்னிந்தியர் என்ற பெருமையை பெறுகிறார் மல்லிகார்ஜூன கார்கே.

முதல் தலைவர்
1890-ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவராக சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பனப்பாக்கம் ஆனந்தசார்லு முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் 1897-ம் ஆண்டு சி.சங்கரன் நாயர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். காங்கிரஸ் கமிட்டிக்கு அகில இந்திய தலைவரான ஒரே கேரளா மாநிலத்தவர் சங்கரன் நாயர் மட்டும்.

சீனிவாச அய்யங்கார்
1920-ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சி.விஜயராகவாச்சாரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆங்கிலேயரான ஹியூமுடன் மிக நெருக்கமாக இருந்தவர். பின்னர் எஸ். சீனிவாச அய்யங்கார் 1926-ல் காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். நாடு விடுதலை முன்னர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கடைசி தென்னிந்தியர் சீனிவாச அய்யங்கார்.

காமராஜர்
நாடு விடுதலைக்குப் பின்னர் 1948-ல் பட்டாபி சீதாராமையா (ஆந்திரா), நீலம் சஞ்சீவரெட்டி (ஆந்திரா) ஆகியோர் காங்கிரஸ் கமிடித் தலைவராகினர். 1964-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுபெரும் தலைவர் காமராஜர். அப்போது கிங் மேக்கர் என புகழப்பட்டார் காமராஜர். 1966-ம் ஆண்டு இந்திரா காந்தியை பிரதமராக்கியதில் முக்கியப் பங்காற்றியவர் காமராஜர். இத்தனைக்கும் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமானதாக இருந்தும் அதனை காமராஜர் ஏற்கவில்லை.

மல்லிகார்ஜூன கார்கே
1968-ம் ஆண்டு கர்நாடகாவின் நிஜலிங்கப்பா காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். அவருக்குப் பின்னர் பிவி நரசிம்மராவ, தென்னிந்தியாவில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானார். தற்போது காங்கிரஸ் கமிடித் தலைவராகி உள்ள மல்லிகார்ஜூன கார்கே அப்பதவியை ஏற்கும் 10-வது தென்னிந்தியர் ஆவார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications