இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் ராகுல் இல்லை! புத்தக ரிலீஸ் விழாவில் கார்கேவின் கடமையுணர்ச்சி!
டெல்லி: ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தகவல் அறிந்தும், கடந்த 23ஆம் தேதி அன்று தனது கடமை தவறாமல் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்திருக்கிறார் மல்லிகார்ஜுனே கார்கே.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்நாள் சாதனைகளை தொகுத்து Son of Soil என்ற தலைப்பில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இந்த புத்தக வெளியீட்டு விழா கலந்துகொள்வதாக உறுதிகொடுத்து 23ஆம் தேதி தேதி கொடுத்திருந்திருக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜுனே கார்கே.
அதன் பேரில் புத்தக வெளியீட்டு விழாவுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசீனா சையத் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் இந்த விழா மாலை நடைபெறுகிறது என்றால் அன்றைய தினம் நண்பகலே ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
இதனால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பதற்றம் பற்றிக்கொண்டது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியினர் திரள ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து புத்தக வெளியீட்டு விழாவை கார்கே ரத்து செய்து விடுவார் என விழா ஒருங்கிணைப்பாளர் ஹசீனா சையத் உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்பார்த்த நிலையில், திட்டமிட்ட நிகழ்ச்சியில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் எனக் கூறி கடமை தவறாமல் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்திருக்கிறார் கார்கே.
அரசியல்வாதிகளுக்கு உணர்ச்சிகளை விட கடமை முக்கியம் என்பதை நிரூபித்திருக்கிறார் போல் கார்கே என, அவரை சொந்தக் கட்சியினரே கமெண்ட் அடிக்கவும் தவறவில்லை.
அதுமட்டுமல்ல அந்த விழாவில் லால் பகதூர் சாஸ்திரி குறித்து பேசியதை காட்டிலும் ராகுல் குறித்து அதிகம் பேசியிருக்கிறார். பகத் சிங் போன்ற வீரம் குணம் கொண்டவர் ராகுல் எனவும் பாஜகவின் மிரட்டல்களுக்கு அஞ்சக்கூடியவர் ராகுல் கிடையாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications