'சர்தார்' மல்லிகார்ஜூன கார்கே- நாங்கள் திராவிடர்கள்- நீங்கள் ஆரியர்கள் என முழங்கிய 'திராவிடர் குரல்'
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக தேர்வாகி உள்ள முதுபெரும் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, வலதுசாரிகளாக ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை தீவிரமாக எதிர்க்கக் கூடிய சமூக நீதியாளர் என திராவிடர் இயக்கத்தினர் புகழாரம் சூட்டி உள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 24 ஆண்டுகளுக்குப் பின் நேரு குடும்பத்தைச் சேராத மல்லிகார்ஜூன கார்கே தலைவராகி உள்ளார். கர்நாடகாவின் நிஜலிங்கப்பாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவராகும் 2-வது கன்னடர் மல்லிகார்ஜூன கார்கே.

இடஒதுக்கீடு போராட்டம்
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த மல்லிகார்ஜூன கார்கே, 1960களின் இறுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். தேர்தல்களில் தோல்வியே காணாத சர்தார் என்ற புகழாரத்துக்குச் சொந்தக்காரர் மல்லிகார்ஜூன கார்கே. கர்நாடகாவில் தேவராஜ் அர்ஸ் தொடங்கி எஸ்.எம்.கிருஷ்ணாவரை எத்தனையோ சகாப்தங்களை எதிர்கொண்டவர். மத்தியில் அமைச்சராக பதவி வகித்த போதும் ஹைதராபாத்- கர்நாடகா பகுதி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தீவிர முன்முயற்சிகளை எடுத்தார்.

ராஜ்நாத்சிங்கின் அந்த பேச்சு
தமக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது எல்லாம் இடஒதுக்கீடு, சமூக நீதி கோட்பாடுகளை உரத்துப் பேசியவர் மல்லிகார்ஜூன கார்கே. நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நேரத்தில், 'சமதர்மம், மதச்சார்பின்மை' என்ற வார்த்தைகளே கிடையாது. ஆனால், 42 ஆவது திருத்தமாக, அவை சேர்க்கப்பட்டன. அம்பேத்கருக்கே தோன்றாத இந்த வார்த்தைகள், அரசியல் காரணங்களுக்காகப் புகுத்தப்பட்டன. மதச்சார்பின்மை என்ற வார்த்தையே ஒழிக்கப்பட வேண்டும். அம்பேத்கரின் சிந்தையில் உதித்தது தான், கூட்டாட்சித் தத்துவம்; அதை முழுமையாகப் பின்பற்றுகிறது மோடி அரசு. சட்டமேதை அம்பேத்கர், மிகுந்த அவமானங்களை சந்தித்த போதிலும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு போதும் கூறியதில்லை என்றார்.

நீங்கள் திராவிடர் நாங்கள் ஆரியர்
இதற்கு பதிலளித்த மல்லிகார்ஜூன கார்கே, சமதர்மம், மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை அம்பேத்கர் சேர்க்க நினைத்தார். ஆனால், அதை ஏற்கவில்லை, கடுமையாக எதிர்த்தார்கள், நீங்கள், ஆரியர்கள்; வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள். நாங்கள், 5,000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும், தொடர்ந்து இங்கு தான் வசிக்கிறோம்; இனியும் இங்கு தான் வசிப்போம் என்றார்.

யார் அந்த ஹெட்கேவர்?
அதேபோல் கர்நாடகா பாடத்திட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்கள் புகுத்தப்பட்டபோது சீறிய மல்லிகார்ஜூன கார்கே, ஹெட்கேவாரின் 1921 ஆம் ஆண்டின் உரையைக் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாட்டின் விடுதலைப் போரில் ஹெட்கேவாரின் பங்களிப்பு என்ன? பாடங்களில் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை சேர்த்து பகத்சிங், நேரு மற்றும் காந்தியார் ஆகியோர் குறித்த பாடங்களை ஒவ்வொன்றாக அகற்ற முயல்கிறார்கள். இதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். எனும் விஷம்
மேலும் ராகுல் காந்தியை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்த போது, ஆர்.எஸ்.எஸ். விரிக்கும் வலையில் விழ வேண்டாம். ஆர்.எஸ்.எஸ். என்பது விஷத்தைப் போன்றது. தங்களது கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதன்மூலம் விஷத்தைப் பருகுமாறு ராகுல் காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் வற்புறுத்துகின்றனர். விஷத்தை குடிக்க வேண்டிய அவசியம் ராகுல் காந்திக்கு இல்லை என கொந்தளித்தவர் மல்லிகார்ஜூன கார்கே. இப்படி திராவிடத்தின் குரலாக ஒலிப்பதாலேயே மல்லிகார்ஜூன கார்கேவை கொண்டாடுகின்றனர் திராவிடர் இயக்கத்தினர்!
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications