“கர்நாடகாவிலேயே இதை செஞ்சிருக்கலாமே?”.. பாஜகவுக்கு மல்லிகார்ஜுன கார்கே 'நறுக்'! காங். தீவிர போராட்டம்
டெல்லி: ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை வகித்த மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, கட்சியின் மூத்த தலைவர்கள் விலகல், புதிய தலைமை கோரி சோனியாவுக்கு கடிதம் என கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து வந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜடோ யாத்திரை நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து பேசியிருந்தது பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த சலசலப்புகளுக்கு மத்தியில்தான் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருந்தது. அதாவது, கடந்த 2019ம் ஆண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்திருந்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். பிரசாரத்தில் லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோர் குறித்து பேசிய அவர் மோடி குறித்தும் அவதூறு பரப்பும் விதத்தில் பேசியதாக பாஜகவினரால் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து குஜராத்தின் சூரத் நகரில் ராகுல் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு
வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் வழக்கின் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தன. இதனையடுத்து மார்ச் 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஹெ.ஹெ.வர்மா கூறியிருந்தார். மேலும் தீர்ப்பு வாசிக்கப்படும்போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி 23ம் தேதி ராகுல் ஆஜராகியிருக்க தீர்ப்பு வாசிக்கப்பட்டது. தீர்ப்பின்படி ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டன. எனவே அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு தண்டணை தொடர்பாக மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.

சிறை தண்டனை
அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்புகளை கிளப்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து அடுத்தநாள் அதாவது மார்ச் 24ம் தேதியன்று மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. காரணம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்தான். இந்த சட்டத்தின்படி எம்ஏல்ஏ அல்லது எம்பி ஆகியோர் யாரேனும் குற்ற வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் அவர்களுடைய பதவி பறிக்கப்படும். இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது கூட்டணி கட்சி தலைவர்கள், கூட்டணி அல்லாத தலைவர்கள் மமதா பானர்ஜி, உத்தவ் தாக்ரே என பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டத்தை தொடங்கி இருக்கிறது. இன்று டெல்லி ராஜ்காட்டில் மல்லிகார்ஜுன கார்கே 'சத்தியாகிரக' போராட்டத்தை தொடங்கி இருக்கிறார். இந்த போராட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, "ராகுல் காந்தி சாமானிய மக்களுக்காக போராடுகிறார். இது ஆளும் கட்சியினருக்கு பிடிக்கவில்லை. எனவேதான் இப்படியான அடக்குமுறைகளை காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் ஏவப்படுகிறது. இதை எதிர்த்து கட்சி உறுதியாக போராடும்.

போராட்டம்
எங்களை நசுக்க நினைப்பவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இந்த சத்தியாகிரக போராட்டம் வெறும் தொடக்கம் மட்டும்தான். நாடு முழுவதும் இதேபோன்ற சத்தியாகிரக போராட்டங்கள் இனி வரும் நாட்களில் தொடர்ந்து நடத்தப்படும். ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பேசிய பேச்சுக்கு குஜராத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கர்நாடகாவில் வழக்கு தொடர பாஜகவுக்கு போதிய அளவு தைரியம் கிடையாது" என்று கூறியுள்ளார். ராகுல் காந்தியை எம்பி பதவியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில், அவர் அரசு குடியிருப்பிலிருந்து காலி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications