Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரத் பவாருடன் “திடீர் மீட்டிங்” களத்தில் இறங்கிய மம்தா.. கூட்டத்திற்கு முன்பே- ‘அவர்’ மனசு மாறுவாரா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக நாளை டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.

பொது வேட்பாளராக சரத் பவார் முன்னிறுத்தப்படுவார் எனக் கூறப்படும் நிலையில், அவர் போட்டியிட மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று அவரை நேரில் சந்தித்துள்ளார் மம்தா பானர்ஜி.

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகளை பா.ஜ.க கூட்டணி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் 51.1 சதவீதம் பெற்றுள்ளன. பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக தேவைப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிராக

பாஜகவுக்கு எதிராக

பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இப்போது வெளிப்படையாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், டி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை களமிறக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும் உள்ள 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.

 தலைவர்கள் பங்கேற்பு

தலைவர்கள் பங்கேற்பு

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்க இருக்கின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் நாளை நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். சிபிஐ) மற்றும் சிபிஎம் கட்சிகளும் பங்கேற்க உள்ளன. திமுகவின் டி.ஆர்.பாலு, சிவசேனாவின் சுபாஷ் தேசாய், ஆர்எல்டியின் ஜெயந்த் சவுத்ரி மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.

சரத் பவார்

சரத் பவார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவாருக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. பாஜக வேட்பாளர் வெல்வது கிட்டத்தட்ட உறுதி என்பதால், குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆகி தோற்பதற்கு சரத் பவார் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் எதிர்க்கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று டெல்லி சென்று, அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும் என சரத் பவாரிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது வேட்பாளராக ஒரு வலிமையான தலைவர் இருக்க வேண்டும் என்றும், நீங்கள் வேட்பாளராவது காலத்தின் கட்டாயம் என்றும் மம்தா பானர்ஜி, சரத் பவாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 மனம் மாறுவாரா?

மனம் மாறுவாரா?

குடியரசுத் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக நாளை எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இருவரது சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜியின் சந்திப்பைத் தொடர்ந்து, சரத் பவார் பொது வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கச் சம்மதிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட திட்டங்கள் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+