இனி ரசகுல்லாவில் கல்தான்.. மோடியின் பற்கள் உடையட்டும்.. கடும் கொந்தளிப்பில் மம்தா பானர்ஜி!
டெல்லி: இனி ரசகுல்லாவில் கற்களை வைத்து அனுப்புவேன். அதை சாப்பிட்டு மோடியின் பற்கள் உடைந்து போகட்டும் என காட்டமாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இது போல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு மோடி ஒரு பேட்டி அளித்திருந்தார்.
அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.

வங்கதேச பிரதமர்
மோடி கூறுகையில் எனக்கு எதிர்க்கட்சியிலும் நிறைய நண்பர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, வங்கதேச பிரதமர் ஷேக் அசினா ஆகியோர் எனது நண்பர்களாவர்.

கடும் எதிர்ப்பு
வங்காள வருடப் பிறப்பின் போது மம்தா பானர்ஜி எனக்கு ரசகுல்லாவையும் குர்தாக்களையும் அனுப்புவார் என்றார் மோடி. இதை கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுவாக மோடியை ஜெயலலிதாவுக்கு பிறகு கடுமையாக எதிர்க்கும் தலைவர் என்றால் அவர் மம்தாதான்.

மறுபக்கம் ரசகுல்லா
அப்படியிருக்க ஒரு பக்கம் திட்டிக் கொண்டும், மறுபக்கம் ஸ்வீட் அனுப்புவதும் மக்கள் மட்டுமல்லாது கட்சியினருக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது போல் மம்தா, மோடிக்கு இனிப்பு அனுப்புவது யாருக்கும் தெரியாத ஒன்று. அதை பொதுவெளியில் மோடி போட்டு கொடுத்துவிட்டாரே என்ற கோபத்தில் மம்தா உள்ளார்.

பல்
இந்த நிலையில் ஒரு பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில் இனிமேல் ரசகுல்லாவில் கல்லை வைத்து மோடிக்கு அனுப்புவேன். அதை கடித்துவிட்டு அவரது பற்கள் உடைந்து போகட்டும் என காட்டமாக பேசியுள்ளார். இதை பார்த்துவிட்டு கட்சியினரே அதிர்ந்து போயுள்ளனர்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications