சீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது!
மனைவியை வெட்டி கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
டெல்லி: ஓவர் சந்தேகம்.. எப்ப பார்த்தாலும் சண்டை.. என்ன செய்யறதுன்னே தெரியல.. அதனால மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்றுவிட்டார் கணவர்!
டெல்லியின் கிராரி பகுதியை சேர்ந்தவர் அஷு. 33 வயதாகிறது. கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கிறார். சீமா என்ற மனைவி இருக்கிறார். சீமாவுக்கு 30 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் சீமா மீது அஷுவுக்கு எப்ப பார்த்தாலும் சந்தேகம்.. அதனால் இருவருக்கும் இடையே நிறைய சண்டை வந்துள்ளது.

கொலை
ஆத்திரம் தீர எவ்வளவுதான் சண்டை போட்டாலும், சீமா மீது சந்தேகம் அடங்கவே இல்லை. இப்படி சண்டை போட்டுட்டு இருக்கிறதுக்கு, கொலையே செய்துவிடலாம் என்று அஷு முடிவெடுத்தார். அதற்காக, தங்களது இன்னொரு வீட்டில் இருந்து பொருட்களை எடுத்து கொண்டு வரலாம் வா.. என்று சீமாவை அழைத்து சென்றார் அஷு.

செப்டிக் டேங்க்
அங்கு போனதுமே திரும்பவும் சண்டை ஆரம்பமானது. இதில் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அஷு மனைவியை அரிவாளால் அவரது உடம்பை துண்டு, துண்டாக வெட்டினார். பின்னர், சீமான் கை, கால்கள், தலையை வீட்டின் செப்டிக் டேங்க்கில் போட்டுவிட்டார்.

கால்வாய்
வெறும் உடலை மட்டும் ஒரு கேரிபேக்கில் வைத்து 2 கிலோமீட்டர் பைக்கில் வைத்து எடுத்து சென்று அங்கிருந்த ஒரு கால்வாய் ஒன்றில் வீசி எறிந்தார். பிறகு தன்னுடைய மகள்களுக்கு போனை போட்டு, நான் உங்க அம்மாவை கொன்னுட்டேன் என்று தகவல் சொல்லிவிட்டு, பக்கத்தில் இருந்த ஸ்டேஷனில் சரண் அடைந்துவிட்டார் அஷு.

உடல் பாகங்கள்
இதையடுத்து, அஷுவைக் கைது செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மணி நேரத்துக்கு பிறகு சீமான் உடல் பாகங்களை தீவிரமாக தேடி எடுத்தனர். இந்த சம்பவம் டெல்லியையே அதிர வைத்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications