கொடுமை! "எய்ட்ஸ் பரப்ப போறேன்.." 8 வயது குழந்தையை கொடூரமாக பலாத்காரம் செய்த மனித மிருகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடும்ப வன்முறை ஒரு புறம் என்றால் தொடர்ச்சியாகப் பெண்கள் மீது பலாத்கார சம்பவங்களும் நடந்து வருகிறது.

அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர் கதையாகி வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பலாத்காரம்

பலாத்காரம்

பெரும்பாலான நேரங்களில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது அவர்களுக்கு நன்கு தெரிந்த நபர்களில் ஒருவராகவே இருப்பார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியில் 8 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பலத்த காரம் செய்துள்ளான். அந்த விசாரணையில் போலீசார் கண்டுபிடித்த விஷயங்கள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

டெல்லி

டெல்லி

கடந்த ஜூன் 15ஆம் தேதி டெல்லியின் மோலார்பந்த் பகுதியில் வசிக்கும் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பதர்பூர் காவல்துறைக்குப் புகார் வந்தது. பக்கத்து வீட்டில் வசித்த ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் காவல்துறை நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

போலீசார்

போலீசார்

அந்த இளைஞரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும் ஒரே வாடகை வீட்டை எடுத்து அதில் இரு வேறு பகுதிகளில் குடி இருந்துள்ளனர். அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் சிறுமியைக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

எய்ட்ஸ்

எய்ட்ஸ்

வழக்கு விசாரணையில் போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன. அதாவது அந்த இளைஞருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருந்துள்ளது. அது அந்த இளைஞருக்கும் தெரிந்துள்ளது. இருந்த போதிலும் எய்ட்ஸை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே அந்த இளைஞர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். இதைக் கண்டுபிடித்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

 மருத்துவமனை

மருத்துவமனை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது தாயும் மருத்துவ உதவிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயின் புகாரின் அடிப்படையில், இளைஞரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் உள்ள பாமினிகேரா கிராமத்தில் போலீசார் பதுங்கி இருந்து தெரிய வந்தது.

கைது

கைது

அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர், ஹரியானா போலீசாரின் உதவி உடன் குற்றவாளியைக் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் தான் வேண்டுமென்ற எய்ட்ஸை பரப்ப வேண்டும் என்பதற்காக பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+