"மிருக வெறி".. நாயை பலாத்காரம் செய்த சைக்கோ மனிதன்.. டெல்லியில் பட்டப்பகலில் பயங்கரம்!
டெல்லியில் பூங்கா ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாய் ஒன்று கதறும் சத்தம் கேட்டது.
டெல்லி: மக்கள் நடமாடும் பூங்கா ஒன்றில் நாயை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து சைக்கோ மனிதன் பலாத்காரம் செய்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானதை போலீஸார் வழக்கு பதிவு செய்து அவனை தேடி வருகின்றனர்.
மிருகங்களுடன் உறவு கொள்வது ஒருவித பயங்கர மனநோய் என்றும், இதற்கு உரிய சிகிச்சை பெற்றால் மட்டுமே தீர்வு காண முடியும் எனவும் மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகரிக்கும் வக்கிரம்
நாட்டில் சமீபகாலமாக நாய், பூனை, பசு மாடு உள்ளிட்ட மிருகங்களிடம் மனிதர்கள் உறவுகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வடமாநிலங்களில்தான் இந்த அருவருப்பான நிகழ்வுகள் அதிகம் நிகழ்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட மகாராஷ்டிராவில் வனப்பகுதி ஒன்றில் காட்டுப் பல்லிகளை பலாத்காரம் செய்த 3 இளைஞரகளை வனத்துறையினர் கைது செய்தனர். தமிழகத்திற்கு வரும் வட மாநிலத்தவர்கள் சிலர் இங்குள்ள பசு மாடுகளை பலாத்காரம் செய்யும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இதில் சில சமயங்களில் அந்த விலங்குகள் உயிரிழக்கும் கொடுமைகளும் நடக்கிறது.

கதறிய நாய்
இந்நிலையில், இதுபோன்ற ஒரு வக்கிர சம்பவம்தான் டெல்லியில் நடந்திருக்கிறது. டெல்லியின் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயற்சியில் ஈடுபட்டிருந்தினர். அப்போது நாய் ஒன்று கதறும் சத்தம் அனைவருக்கும் கேட்டது. பெரும்பாலானோர் நாய்கள் தங்களுக்குள் சண்டை போட்டு கத்திக் கொண்டிருக்கும் என நினைத்து தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.

கண்ட காட்சி
இந்நிலையில், சில இளைஞர்கள் மட்டும் நாயின் சத்தம் வரும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க மனிதன், ஒரு தெரு நாயை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து பலாத்காரம் செய்து கொண்டிருந்தான். இதை பாரர்த்த அந்த இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தங்கள் செல்போனிலும் இதை வீடியோ எடுத்தனர். வலி தாங்க முடியாமல் அந்த நாய் கதறுவதை பொருட்படுத்தாமல் அந்த சைக்கோ மனிதன் அதை பலாத்காரம் செய்தான்.

வழக்கு பதிவு
பின்னர், அந்த இளைஞர்கள் அவனை மடக்கிப் பிடிக்க முயன்றனர். இதை கவனித்த அவன், நாயை கீழே போட்டுவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பியோடினான். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விலங்கு ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், போலீார் வழக்கு பதிவு செய்து அந்த சைக்கோ மனிதனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications