ராகுலுக்கு புதுசிக்கல்.. பாரத் ஜோடோ நியாய யாத்திரை நடக்குமா? மணிப்பூர் பாஜக அரசால் தலைவலி.. என்ன?
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி வரும் 14ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை' தொடங்க உள்ளார். இந்நிலையில் தான் அந்த யாத்திரைக்கு மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக அரசு இன்னும் அனுமதி கொடுக்காத நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ‛இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் ‛பாரத் ஜோடோ யாத்திரை' மேற்கொண்டார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவரை மொத்தம் 3,500 கிலோமீட்டர் தொலைவு நடந்தார். இது காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு உற்சாகத்தை வழங்கியது.

இதையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி 2வது கட்டமாக ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்ற பெயரில் யாத்திரை தொடங்க உள்ளார். இந்த யாத்திரை என்பது வரும் 14 ம் தேதி மணிப்பூரில் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த யாத்திரை மொத்தம் 6,713 கிலோமீட்டர் தொலைவு நடைபெற உள்ளது. மொத்தம் 66 நாட்களில் ராகுல் காந்தி நடைப்பயணம் செய்து இந்த தொலைவை கடக்க உள்ளார். இந்த யாத்திரை என்பது மொத்தம் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 20ம் தேதி இந்த யாத்திரையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை என்பது வரும் 14ம் தேதி மணிப்பூர் மாநிலம் ஹட்டா கங்ஜெய்புங்கில் இருந்து தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் மணிப்பூரில் இந்த யாத்திரையை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அங்குள்ள அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் அனுமதி கோரிய கடிதம் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதாவது மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. குக்கி-மைத்தேயி இன மக்கள் இடையேயான மோதல், வன்முறை என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் மணிப்பூரின் மோரே பகுதியில் புதிதாக வன்முறை நடந்தது. கடும் துப்பாக்கிச்சண்டை என்பது நடந்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதனை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியின் யாத்திரைக்கு இன்னும் அனுமதி என்பது வழங்கப்படவில்லை. இதுபற்றி மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பீரன் சிங் கூறுகையில், ‛‛மாநிலத்தில் காவல்துறையின் செயல்பாட்டால் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி அளிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம். இதுதொடர்பாக பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து தகவல்களை பெற்று வருகிறோம். அவர்களிடம் இருந்து அறிக்கை பெற்ற பின் உறுதியான முடிவை எடுப்போம்'' என்றார்.
இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், ''வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கிருந்து நீதி யாத்திரை தொடங்கப்பட உள்ளது. இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அனுமதி கோரிய காங்கிரசின் விண்ணப்பம் ஒப்புதல் கேட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் மத்திய அரசின் வேலையா?'' என்று கேள்வி எழுப்பினார்.
-
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications