மணிப்பூர்: மோடி மவுனம்- நாடாளுமன்ற வளாகத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்பிக்கள் 'முதல்’ போராட்டம்
டெல்லி: மணிப்பூர் வன்முறைகளை ஒடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த உள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மணிப்பூர் வன்முறைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை; மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இதனால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 2 சபைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.
இதன் அடுத்த கட்டமாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பாக 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பாக அனைத்து எம்பிக்களும் நாளை கண்டன போராட்டம் நடத்த உள்ளனர்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலம் சென்று முகாமிட்டிருந்தார். மணிப்பூரில் அமைதி திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு சார்பாக அமித்ஷா மேற்கொண்டிருந்தார். மேலும் அமைதி குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மணிப்பூரில் வன்முறைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கு 26 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு INDIA என பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில் பெயரிடப்பட்டது. இந்தியா கூட்டணி எம்பிக்கள் சார்பாக நாளை நாடாளுமன்ற வளாகத்தில் முதல் போராட்டம் நடைபெற உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications