மணிப்பூர்: பாஜக அரசு நீடிப்பதில் சிக்கல்! 9 பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி- டெல்லியில் மனு!
டெல்லி: மணிப்பூர் வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன் சிங்குக்கு எதிராக 9 பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். 9 பாஜக எம்.எல்.ஏக்களும் மாநிலத்தில் அமைதியை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
மணிப்பூர் மாநில இன வன்முறைகளால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வன்முறைகளை ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேரில் சென்று முகாமிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைதிக் குழுக்களை உருவாக்கி இருந்தார். ஆனாலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மணிப்பூரில் பாஜக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதே நேரத்தில் பாஜகவை சேர்ந்த மொத்தம் உள்ள 23 எம்.எல்.ஏக்களில் 9 பேர் முதல்வர் பைரேன் சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த 9 பேரும் மைத்தேயி இனக்குழுவை சேர்ந்தவர்கள். மாநிலத்தில் ஆளும் பாஜக அரசால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் மத்திய ரசு தலையிட வேண்டும் என இந்த 9 பேரும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனால் மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications