இதயம் வலிக்கிறது.. மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட பெண்கள்! நாடாளுமன்றத்தில் கண்சிவந்த மோடி
டெல்லி: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் இதயம் வலிக்கிறது என வருத்தத்தை பதிவு செய்த நிலையில் இந்த விவகாரத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என உறுதியளிக்கிறேன் என்று கண் சிவந்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இரு சபைகளும் கூடின. இதையடுத்து மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மதியம் 12 மணி வரை இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதையடுத்து 12 மணிக்கு மீண்டும் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களை துவங்கி நடைபெற உள்ளது. இந்த வேளையில் மணிப்பூர் வன்முறை குறித்தும், 2 பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்ற கும்பல் மீதான நடவடிக்கை தொடர்பாகவும் பிரச்சனையை கிளப்ப உள்ளனர்.
மணிப்பூர் வன்முறை கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் இரண்டரை மாதங்களாக நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி இதுபற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது எதிர்க்கட்சியினரை கோபப்படுத்தி உள்ளது. இதனால் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே தான் மணிப்பூர் வன்முறையின்போது 2 குக்கி இன பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ பற்றி பிரதமர் மோடி பேசியுள்ளார். அதாவது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க இன்று பிரதமர் மோடி வந்தார். அப்போது அவர் நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‛‛மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் என் இதயம் வலிக்கிறது. இதயத்தில் கோபம் நிரம்பி வலிகிறது. இந்த சம்பவத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறனே். சட்டம் முழுவலிமையுடன் தனது கடமையை செய்யும். மணிப்பூர் மகளுக்கு நடந்த சம்வத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது'' என தெரிவித்துள்ளார்.
இதுதவிர, ‛‛தற்போது சவான் எனும் புனித மாதம் நடக்கும் நிலையி்ல ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தில் அனைவரும் கூடுகிறோம். எம்பிக்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து இந்த கூட்டத்தொடரை மக்கள் நலத்திட்டங்கள், பிரச்சனைகள் பற்றி பற்றி விவாதிக்க பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். கூட்டத்தொடரில் விவாதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விவாதம் எவ்வளவு கூர்மையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தொலைநோக்கு பார்வையில் முடிவுகளை பெற முடியும்'' என்றார்.












Click it and Unblock the Notifications