மாஞ்சோலை குடும்பங்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை தமிழக அரசு தொடர வேண்டும் - உச்சநீதிமன்றம்
டெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டாகும். இங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கி வேலைபார்த்து வந்தனர். கடந்த ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மாஞ்சோலை எஸ்டேட்டில் 700 குடும்பங்கள் இருந்தன. மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கான குத்தகை காலம் 11.02.2028-ல் முடிகிறது.

குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் கடந்த ஆண்டு அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் முக்கிய வாதம் முன்வைக்கப்பட்டது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் மீண்டும் காப்புகாடாக மாற்றும் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது என மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது.
அதாவது கல்வி, வேலைவாய்ப்பு, இழப்பீடு உள்ளிட்டவற்றை வழங்க உத்தரவிடப்பட்டது. தமிழக அரசு இதனை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே தான் மறுவாழ்வு திட்டத்துக்கான கல்வி, வேலைவாய்ப்பு, இழப்பீடு உள்ளிட்டவற்றை உயர்த்தி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஜான் கென்னடி, அமுதா, சந்திரா உள்ளிட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாஞ்சோலை - அகஸ்தியர் மலைப்பகுதியில் மத்திய குழு ஆய்வு நடத்தி உள்ளது. இதனால் எஞ்சியுள்ள குடும்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛மாஞ்சோலை தொழிலளர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 247 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அதில் 190 நபர்களுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 534 குடும்பங்களில் 84 குடும்பங்கள் இதுவரை மாஞ்சோலையை விட்டு வெளியேறாமல் உள்ளனர்'' என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‛‛மாஞ்சோலையில் இருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கான வாழ்வதாரம் உள்ளிட்டவை பற்றி தெரிவிக்கப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகள் பற்றி அரசு இன்னும் தெரிவிக்கவில்லை. 144 குடும்பங்களுக்கு இன்னும் வீடு கிடைக்கவில்லை. அவர்கள் எங்கு செல்வார்கள்? எஞ்சியுள்ள மக்களுக்கு வீடு கட்டித்தர தமிழக அரசுக்கு கால நிர்ணயம் செய்து உத்தரவிட வேண்டும்'' என்றும் கேட்டனர்.
இதற்கு தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர், ‛‛நிவாரண நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டு வருகிறது. மாஞ்சோலை பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தங்கியுள்ள 84 குடும்பங்களையும் வெளியேற்ற வேண்டும்'' என்றும் கூறினர்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஏற்கனவே வீடு கட்டி தருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒருவேளை தமிழக அரசு வீடு கட்டி தராவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் . வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் இப்போதைக்கு பிறப்பிக்க முடியாது. மாஞ்சோலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications