பொது மயானத்தில் எரியூட்டப்பட்ட மன்மோகன் சிங் உடல்.. அவமரியாதை நெஞ்சை உலுக்கியது.. ஜோதிமணி
டெல்லி: டாக்டர் மன்மோகன் சிங் எவ்வளவு உயர் பதவிகளை வகித்த போதும் சாதாரண மனிதராகவே வாழ்ந்தார். சாதாரண மனிதராகவே மறைந்தார். இன்று சாதாரண மனிதராக பொது மயானத்தில் ( Nigambodh Ghat) எரியூட்டப்பட்டார். பொது மயானத்தில் அவர் உடல் எரியூட்டப்பட்டபோது அருகில் இருந்து பார்த்தேன். அவர் மறைந்த துயரத்தோடு, அவருக்கு நிகழ்ந்த இந்த அவமரியாதை நெஞ்சை உலுக்கியது என கரூர் தொகுதி எம்பியும், காங்கிரஸ் நிர்வாகியுமான ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் சீக்கிய பிரதமரான மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கிற்கு தனி இடம் ஒதுக்காமல் பாஜக அரசு அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டிவருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டிருந்த பதிவில், "இந்திய அன்னையின் மகத்தான புதல்வரும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை டெல்லி நிகம்போத் காட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியதன் மூலம் மத்திய அரசு அவரை முற்றிலும் அவமதித்திருக்கிறது.

அவர் இந்தியாவிற்கு 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக் காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியிருக்கிறது. அவரது கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக இருக்கிறது.
இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்துக்கு மதிப்பளித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட நினைவிடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு நபரும் எந்தவித சிரமமும் இன்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும் தனி நினைவிடத்துக்கும் தகுதியானவர் ஆவார். தேசத்தின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்துக்கும் அரசு மரியாதை காட்டியிருக்க வேண்டும்" இவ்வாறு ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியினர் பலர் மன்மோகன் சிங்கிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு இறுதி சடங்கிற்கு தனி இடம் ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார்கள்.
கரூர் தொகுதி எம்பியும், காங்கிரஸ் நிர்வாகியுமான ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், "டாக்டர் மன்மோகன் சிங் எவ்வளவு உயர் பதவிகளை வகித்த போதும் சாதாரண மனிதராகவே வாழ்ந்தார். சாதாரண மனிதராகவே மறைந்தார். இன்று சாதாரண மனிதராக பொது மயானத்தில் ( Nigambodh Ghat) எரியூட்டப்பட்டார்.
முன்னாள் பிரதமர் மரணமடைந்தால் தனி இடத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, பிறகு அந்த இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். வழக்கமாக பிரதமர்களுக்கு வழங்கப்படும் இந்த மரியாதையை மகத்தான அந்த மனிதருக்கு வழங்க மோடி அரசு மறுத்துவிட்டது. பொது மயானத்தில் அவர் உடல் எரியூட்டப்பட்டபோது அருகில் இருந்து பார்த்தேன். அவர் மறைந்த துயரத்தோடு, அவருக்கு நிகழ்ந்த இந்த அவமரியாதை நெஞ்சை உலுக்கியது.
மன்மோகன் சிங் இந்த தேசத்தின் பொருளாதாரத்தை பேரழிவிலிருந்து மீட்டவர். உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமதிப்பை உருவாக்கியவர். அவர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்தது.27 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டவர். புரட்சிகரமான,மக்களை அதிகாரப்படுத்துகிற சட்டங்களை உருவாக்கியவர். தன் வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர்.
பத்தாண்டுகாலம் இந்தியாவின் பிரதமர். அப்படிப்பட்ட ஒருவருக்கு இறுதிச் சடங்கு செய்ய ஒரு இடமில்லையா? பொது மயானத்தில் தான் அவர் உடல் எரியூட்டப்பட வேண்டுமா? எதிர்கட்சியை சேர்ந்த பிரதமர் என்றால் மோடி எரியூட்ட இடம் கூட தரமாட்டாரா? ஒரு மகத்தான மனிதரின் மரணத்தில் கூட இப்படி மோசமான அரசியல் செய்ய எப்படி மனம் வந்தது? இந்த தரம்தாழ்ந்த அரசியலால் மன்மோகன் சிங் அவர்களின் புகழ் மறைந்து விடாது. இந்த தேசம் இருக்கும் வரை அவர் புகழ் நீடித்து நிலைத்திருக்கும்" என்று ஜோதிமணி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மன்மோகன் சிங் உயிரோடு இருந்தபோது அவருக்கு உண்மையான மரியாதையை காங்கிரஸ் ஒருபோதும் வழங்காத நிலையில், இபோது அவரது மரியாதையின் பெயரில் மலிவான அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸின் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனையை எவ்வளவு கண்டித்தாலும் போதாது. மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது என்று கூறினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications