டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மன்மோகன்சிங், ப.சிதம்பரம், குலாநம்பி ஆசாத்.. காங்.-ன் பிரதமர் வேட்பாளர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    மாநில கட்சிகளை வளைக்க பாஜக புதிய திட்டம்- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் கட்சி 180 இடங்களைக் கைப்பற்றினால் பிரதமர் வேட்பாளர்களாக மன்மோகன்சிங், ப.சிதம்பரம் மற்றும் குலாம்நபி ஆசாத்தை முன்னிறுத்தி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. தேர்தல் முடிவில் தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என்பது அனைத்து கட்சிகளின் கணிப்பு.

    லோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்! லோக்சபா தேர்தல் முடிவுகள்.. மின்னல் வேக அப்டேட்கள் & விரிவான கவரேஜ் உங்கள் டெய்லிஹன்ட்டில்!

    தீவிர முயற்சிகள்

    தீவிர முயற்சிகள்

    இதற்காகவே பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ப.சிதம்பரம் பெயரும் லிஸ்ட்டில்

    ப.சிதம்பரம் பெயரும் லிஸ்ட்டில்

    காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 180 இடங்களில் வென்றால் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் அல்லது குலாம்நபி ஆசாத் ஆகியோரில் ஒருவரை பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தும். இவர்களில் ப.சிதம்பரத்துக்கு தென்மாநில கட்சிகள் மற்றும் மமதா பானர்ஜியின் ஆதரவு இருக்கிறது. அதனால் ப.சிதம்பரத்துக்கே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

    சந்திரபாபுவுக்கு காங். ஆதரவு

    சந்திரபாபுவுக்கு காங். ஆதரவு

    அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி 120 இடங்களில் வென்றால் சந்திரபாபு நாயுடு பிரதமராக ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாம். மமதா மற்றும் மாயாவதி தரப்பிடமும் இதுகுறித்து காங்கிரஸ் பேசி வருகிறதாம்.

    மாயாவதிக்கு அகிலேஷ் ஆதரவு

    மாயாவதிக்கு அகிலேஷ் ஆதரவு

    ஆனால் மாயாவதியைத்தான் பிரதமராக்க வேண்டும் என்பதில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உறுதியாக இருக்கிறார். இதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பேசிக் கொள்ளலாம் என காங்கிரஸ் கூறியுள்ளதாம்.

    English summary
    Congress sources said that Former PM Manmohan Singh, Former Union Minister P Chidambaram are in the Prime Minister Race.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X