ஒலிம்பிக் விளையாட்டு- இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துங்கள்.. சியர் ஃபார் பாரத்.. பிரதமர் மோடி
டெல்லி: ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிம்பிக் குறித்து பேசியதாவது: இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!

நண்பர்களே, விளையாட்டு உலகத்தில் இந்த ஒலிம்பிக்ஸிலிருந்து சற்று விலகி, சில நாட்கள் முன்பாக கணித உலகிலும் கூட ஒரு ஒலிம்பிக் நடந்தேறியது. சர்வதேச கணித ஒலிம்பியாட். இந்த ஒலிம்பியாடிலே பாரதத்தின் மாணவர்கள், மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இதிலே நமது அணியின் மிகச் சிறப்பான செயல்பாடு காரணமாக நான்கு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள், மொத்த பதக்கப் பட்டியலில் நமது அணியானது, தலைசிறந்த ஐந்து அணிகளில் ஒன்றாக வெற்றிகரமாக இடத்தைப் பிடித்தது. தேசத்தின் பெயருக்குப் பெருமை சேர்த்த இந்த மாணவர்களின் பெயர்கள் -
புணேயில் வசிக்கும் ஆதித்ய வேங்கட் கணேஷ், புணேவைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவரான சித்தார்த் சோப்டா, தில்லியின் அர்ஜுன் குப்தா, கிரேட்டர் நொய்டாவின் கனவ் தல்வார், மும்பையின் ருஷீல் மாதுர், தவிர குவாஹாடியைச் சேர்ந்த ஆனந்தோ பாதுரி ஆகியோர். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications