இலங்கை மன்னாரில் அதானி மின் திட்டத்துக்கு 'ஒரு துண்டு' நிலம்கூட தர முடியாது- தமிழர்கள் ஆவேசம்!
டெல்லி: இலங்கை மன்னாரில் அதானி குழுமம் அமைக்கும் மின் திட்டத்துக்கு நிலம் தர முடியாது என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இலங்கை மன்னாரில் அதானி குழுமம் காற்றாலை உயர் மின் திட்டம் அமைக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதானி குழுமம் ராட்சத காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 20 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. மன்னார் நகரம் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் இந்த மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மன்னாரில் இத்திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் கூறியதாவது: மன்னார் அதானி திட்டத்தால் எங்களுக்குப் பேரழிவு ஏற்படும் என பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறோம். எங்களது எதிர்ப்பை மீறித்தான் மன்னாரில் அதானி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மன்னாரில் அதானி திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்களின் வரலாறும் பண்பாடும் அழிந்து போகும். எங்களின் வாழ்விடங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டு மக்கள் வாழ முடியாமல் வேறிடங்களுக்கு இடம் பெயர நேரிடும். மாணவர்கள் கல்வி, எதிர்காலம் அத்தனையுமே பாழாகும். எமது மன்னார் மண் வளம் நிர்மூலமாக்கப்பட்டு நாசமாகிவிடும். மன்னார் நிலத்தில் ஒரு துணைக் கூட அதானி குழுமத்துக்காக நாங்கள் வழங்கவே முடியாது. மன்னார் அதானி திட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்க போகிறோம். எந்தச் சூழ்நிலையிலும் அதானி திட்டத்தை மன்னார் மண்ணில் அனுமதிக்கவே முடியாது. இவ்வாறு சந்தியோகு மாக்கஸ் அடிகளார் கூறினார்.
மன்னார் பிரதேசத்தின் முக்கியத்துவம் என்ன?: உலக அளவில் பறவைகள் இடம் பெயரும் முக்கியமான 8 இடங்களில் மன்னார் பிரதேசமும் ஒன்று. உலகின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் பறந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பறவைகள் மன்னார் வந்து செல்கின்றன. ஒரு ஆண்டுக்கு ஒன்றரை கோடி வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லக் கூடிய பிரதேசம் மன்னார். அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மட்டும் பல லட்சக்கணக்கான பறவைகள் மன்னாரிலேயே தங்கிவிடும். உலக நாடுகளின் பறவைகளின் சொர்க்கம்தான் மன்னார். தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் பெரும் அங்கமாக இருக்கும் மன்னாரில் தமிழ் மீனவர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படையும் என்பது தமிழர்களின் எதிர்ப்புக்குக் காரணம்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications