மராத்திய மன்னன் சிவாஜி..அவுரங்கசீப்பிடம் மகனை பிணைக் கைதியாக ஒப்படைத்த 'சரண்டர்' சரித்திரம் என்ன?
டெல்லி: இந்திய மன்னர்களின் சரித்திரத்தில் 'வீர'த்துக்கு அடையாளமாக போற்றப்படுகிறவராக இடம் பெற்றிருப்பவர் மராத்திய மன்னர் சிவாஜி. முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் மராத்திய மன்னராக இருந்த சிவாஜியின் வாழ்க்கை, நமக்கு பாடங்களில் கற்பிக்கப்பட்டதைவிட பல்வேறு சரித்திரங்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது என்கின்றன வரலாற்றுப் பக்கங்கள்.
சத்ரபதி சிவாஜி மகாராஜா.. இது மராத்தியர்களின் வீரத்தை பறைசாற்றுகிற பெயராக இப்போதும் கொண்டாடப்படுகிறது.. அதுவும் அவுரங்கசீப் எனும் முகலாய அரசருக்கு எதிரான யுத்தங்களை நடத்திய வீர புருஷராக கொண்டாடப்படுகிறார் வீர சிவாஜி. இன்றைக்கும் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதர்ஷ சக்தியாக இருப்பவர்தான்.

மராத்திய சிவாஜியின் தொடக்க காலம்
மராத்தியத்தின் சுல்தான்களில் ஒருவரான இருந்த சிவாஜி தமிழகத்தின் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு நிலப் பகுதிகளை கைப்பற்றினார். அப்போது அவுரங்கசீப் தலைமையிலான முகலாயப் பேரரசுடன் மோதலில் ஈடுபடாமல்தான் இருந்தார் சிவாஜி. கிபி 1657-ல் இருந்து முகலாயப் பேரரசுடன் மோத தொடங்கினார் சிவாஜி. இந்த மோதலில் தொடக்கத்தில் பல்வேறு அசாத்திய வெற்றிகளை சூடியவர் சிவாஜிதான். இதன் உச்சமாக அவுரங்கசீப் பெரும்படையை அனுப்பினார். அந்த பெரும்படையை வழிநடத்தியது ராஜபுத்திரர்கள் எனும் இந்துக்கள்தான்.
சிவாஜியை கதறவைத்த அவுரங்கசீப்
சிவாஜிக்கு எதிராக ஓராண்டு காலம் ராஜபுத்திரர்களாகிய இந்துக்கள் தலைமையிலான படைதான் நெருக்கடி கொடுத்து யுத்தம் நடத்தியது. இந்து மன்னர் சிவாஜி தலைமையிலான வீரப்படையின் பெரும்பகுதியினர் ராஜபுத்திரர்களுடன் கை கோர்த்து கொள்ள வலுவிழந்து போனது சிவாஜி படை. 1665-ம் ஆண்டு சிவாஜியின் புரந்தர் கோட்டை வீழ்ச்சியால் வேறு வழியே இல்லாமல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்புடன் சமாதான உடன்படிக்கைக்கு போனார் சிவாஜி.
அவுரங்கசீப்பிடம் மகனை பிணைக் கைதியாக தந்த சிவாஜி
1665-ம் ஆண்டு ஜூன் 11-ந் தேதி புரந்தர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கை- அவுரங்கசீப்பிடம் சிவாஜி சரணடைந்த வரலாறாகவே பார்க்கப்படுகிறது. புரந்தர் உடன்படிக்கையில், தமது ராஜ்ஜியத்தின் 23 கோட்டைகளை அவுரங்கசீப்புக்கு தாரை வார்த்து கொடுத்தார் சிவாஜி; முகாலயர்களுக்கு பெருந்தொகை பணத்தை கப்பமாக கட்ட ஒப்புக் கொண்டார்; அத்துடன் முகலாயப் பேரரசுக்காக யுத்தம் நடத்துவதற்கு ஒப்புக் கொண்டு மகன் சம்பாஜியையும் 5,000 படை வீரர்களையும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பிடம் 'பிணைக்கைதிகளாக' ஒப்படைத்தார் 'மாமன்னன்' வீர சிவாஜி. அப்போது சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜிக்கு வயது 9.
அவுரங்கசீப்பிடம் சரணாகதி அடைந்த சிவாஜி
இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து தமக்கு கீழ்படிந்த சிவாஜியை 1666-ம் ஆண்டுக்கு ஆக்ரா கோட்டைக்கு வரவழைத்தார் அவுரங்கசீப். இன்றைய ஆப்கானிஸ்தானின் காந்தாரத்துக்கான முகலாயப் பேரரசின் படை தளபதியாக சிவாஜியை அனுப்பி வைக்கும் திட்டத்துடன் இந்த அழைப்பை விடுத்திருந்தார் அவுரங்கசீப். அங்கு தம்மால் தோற்கடிக்கப்பட்டவர்களுடன் தம்மை நிற்க வைத்து அவமானப்படுத்தப்பட்டால் சிவாஜி கோபமடைந்தார். இதன் விளைவாக ஆக்ரா கோட்டையில் சிவாஜி சிறை வைக்கப்பட்டார். பின்னர்தான் நாம் வரலாற்று பாடங்களில் படித்த, பழக் கூடையில் பதுங்கி சிறையை விட்டு தப்பினார் சிவாஜி.
வீர சிவாஜியாக மீண்டெழுந்த சரித்திரம்
அப்படி ஆக்ரா சிறையைவிட்டு தப்பிய பின்னரும் சிவாஜிக்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே பெரிய மோதல்கள் சில ஆண்டுகளுக்கு இல்லை; அவுரங்கசீப் பேரரசுக்கு கீழ்படிந்தவராக சிவாஜி இருந்து வந்தார். அவுரங்கசீப் பல்வேறு போர்களில் ஈடுபட்டு அவரது கவனம் திசை திரும்பிய காலத்தில்தான் சிவாஜி மீண்டும் 'மீண்டெழுந்தார்'. தக்காணத்தின் இன்றைய தென்னிந்தியாவின் பல பகுதிகளை மீண்டும் கைப்பற்றி 1674-ல் வீர சிவாஜியாக மராத்திய பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். பின்னர் 1680ல் சிவாஜி மறைந்தார்.
அவுரங்கசீப்பால் சிவாஜி மகன் படுகொலை
அவுரங்கசீப்பின் முகலாயப் படையில் சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜி இருந்த போது, இளைய மகன் ராஜாராமுக்கு முடிசூட்டப்பட்டது. இதனால் கொந்தளித்த சம்பாஜி, முகலாயப் படையில் இருந்து தப்பி மராத்திய தேசம் திரும்பினார். பின்னர் மராத்திய பேரரசராக மீண்டும் அவுரங்கசீப்புடன் மோதினார் சம்பாஜி. இந்த யுத்தத்தின் முடிவில்தான் சமாஜி சிறைபிடிக்கப்பட்டு அவுரங்கசீப்பால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
ஷாவா திரைப்படமும் ஆவேசமும்
சிவாஜியின் மகன் சம்பாஜி, அவுரங்கசீப்பால் படுகொலை செய்யப்படுகிற காட்சிதான் தற்போது வெளியான ஷாவா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள்தான் மராத்திய தேசிய உணர்வை கொந்தளிக்க வைத்தது. தங்களது மன்னரை படுகொலை செய்த அவுரங்கசீப் கல்லறை, எப்படி மராத்திய மண்ணில் இருக்க முடியும்? அகற்றித்தான் ஆக வேண்டும் என்கிற கலகக் குரலுக்கு இதுதான் காரணம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications