ஞாயிற்றுக்கிழமை பேங்க் போறீங்களா? 31ம் தேதி வங்கி விடுமுறையா? ஓடோடி வந்த ரிசர்வ் வங்கி.. குட் நியூஸ்
டெல்லி: வருகிற மார்ச் 31ம்தேதி, வங்கிகள் செயல்படுமா? செயல்படாதா? என்ற பெருத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை வங்கிகளுக்கு பொருளாதார ஆண்டாக கணக்கிடப்படுகிறது... அதன்படி, முதல் நாள் மற்றும் கடைசி நாளில் வங்கிகள் அனைத்துமே கட்டாயம் இயங்கும்.

வாய்ப்பில்லை: அந்தவகையில், வரும் மார்ச் 31-ம் தேதி, இந்த வருடத்தின் கடைசி நாளாகும்... ஆனால், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக வருகிறது.. எனவே, வங்கிகள் அன்றைய தினம் செயல்படுவதற்கான வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், அரசின் செயல்பாடுகளுக்காகவும், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காகவும் மார்ச் 31-ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது...
சுற்றறிக்கை: இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கைகளையும் அனுப்பி வைத்திருக்கிறது.. வங்கிகளின் அனைத்து கிளைகளையும் மார்ச் 31-ம் தேதி இயங்க வேண்டும் என்றும், அரசு வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளுக்கும் தங்கள் கிளைகளைத் திறந்து வைக்குமாறும் வங்கி நிர்வாகங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஞாயிற்றுக்கிழமை. 2023-24 நிதியாண்டு தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்க ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகளைக் கையாளும் அனைத்து கிளைகளும் இந்த நாளில் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பரிவர்த்தனை: மேலும், 2023 நிதியாண்டில் ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அனைத்து அரசாங்க பரிவர்த்தனைகளுக்கும் கணக்கு காட்டுவதற்காக, மார்ச் 31, 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரிவர்த்தனைகளுக்கு அரசாங்க ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகளைக் கையாளும் வங்கிகளின் அனைத்து கிளைகளையும் திறக்குமாறு இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மார்ச் 31, 2024 அன்று அரசு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து கிளைகளையும் திறந்து வைக்குமாறு ஏஜென்சி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த விதிவிலக்கான நாளில் வங்கிச் சேவைகள் கிடைப்பதை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான 2023-24 அன்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பம்: இந்த திடீர் குழப்பத்துக்கு காரணம், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் அதிக விடுமுறை தினங்கள் வந்துள்ளன... அதாவது, மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று வங்கி விடுமுறை குறித்து ரிசர்வ் வங்கி, மாதாந்திர லிஸ்ட் வெளியிட்டிருந்தது.
எனவேதான், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இருக்கலாம் என்ற தகவல் பரவியது.,. தற்போது, இந்த அறிக்கை வெளியிட்டு, இந்த குழப்பத்தை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications