Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடித்த பாம்பு எங்கே.. ஜாக்கெட்டை திறந்த டிரைவர்.. எட்டிப்பார்த்த நாகத்தால் ஆடிப்போன மக்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரை பாம்பு கடித்துவிட்டது. அது சாதாரணப் பாம்பு அல்ல, படம் எடுத்து ஆடக்கூடிய ஆக்ரோஷமான நச்சுப் பாம்பு ஆகும். அந்த டிரைவர் மதுராவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று தனக்குச் சிகிச்சை அளிக்கவில்லை என்று கத்திக் கூச்சலிட்டிருக்கிறார். அங்கிருந்தவர்கள், "எங்கே அந்தப் பாம்பு?" என்று கேட்டபோது, அவர் செய்த காரியம் அனைவரையும் உறைய வைத்தது. தனது ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த அந்த நல்ல பாம்பை வெளியே எடுத்து எல்லோருக்கும் காட்டினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இதைப் படிக்கும்போது உங்களுக்கு சிரிப்பு வரலாம் அல்லது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது போன்ற முட்டாள்தனமான செயல்கள் உயிருக்கே உலை வைத்துவிடும். உண்மையில், முடிந்தால் இறந்த பாம்பைக் கொண்டு வருவது ஒரு பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் நடைமுறை என்று அங்குள்ள சிலர் கூறுகிறார்கள். இது பாம்பின் வகையை அடையாளம் காண உதவுகிறது என்றும், அதன் மூலம் சில குறிப்பிட்ட சிக்கல்களை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப எச்சரிக்கையுடன் இருக்க முடியும் என்கிறார்கள்.

Mathura e-rickshaw driver arrived at the hospital for treatment with the cobra snake see the video

அதாவது, கடித்த பாம்பு இரத்த நச்சு அல்லது நரம்பு நச்சு தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்துமா என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும், பாம்புக்கடி விஷமுறிப்பு மருந்தைப் பயன்படுத்துவதற்கும் இது அவசியம். ஏனெனில் பல பாம்புகள் விஷமற்றவை என்று கூறுகிறார்கள்.

ஆனால் கடித்த பாம்பைப் பிடிப்பது அவசியமா? பாம்பு கடித்தவுடன் அந்தப் பாம்பைப் பிடித்துக் கொண்டுதான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமே கிடையாது. கடித்தது எந்த வகைப் பாம்பு (வரியன், கட்டுவிரியன், அல்லது நல்ல பாம்பு) என்று தெரிந்தால் மட்டுமே போதுமானது. அதுவும் தெரியவில்லை என்றாலும், மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை அல்லது அறிகுறிகளை வைத்து 'Polyvalent Anti-snake Venom' சிகிச்சையை உங்களுக்கு உடனே தொடங்கிவிடுவார்கள்.

2. ஜாக்கெட்டுக்குள் பாம்பைவைப்பது- தற்கொலைக்குச் சமம்! பாம்பு கடித்த பிறகு, உடலில் நஞ்சு ஏறத் தொடங்கும். அந்த நேரத்தில் படபடப்பு இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால், பாம்பை உடலோடு அணைத்துக் கொண்டு செல்வது, மீண்டும் மீண்டும் பாம்பு கடிக்க வழிவகுக்கும். இது 'சுயக் கொலை முயற்சிக்கு'ச் சமம் என்கிறார்கள்

பொதுவாக பாம்பு கடித்தவருக்கும் இதயம் வேகமாகத் துடிக்கக் கூடாது. ஏனெனில், ரத்தம் வேகமாக ஓடினால் விஷம் உடல் முழுவதும் சீக்கிரம் பரவிவிடும். அந்த குறிப்பிட்ட மதுரா ஈ டாக்ஸி ஓட்டுநர் கத்திக் கூச்சலிட்டது விஷம் வேகமாகப் பரவவே உதவும்.

பாம்பு கடித்தால், கடித்த இடத்திற்கு மேல் ஒரு துணியை லேசாகக் கட்டி (ரத்த ஓட்டத்தைத் தடுக்கும் வகையில் கட்டவே கூடாது), பதற்றப்படாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அதேபோல் பாம்பைப் பிடிப்பதிலோ, அதனுடன் செல்ஃபி எடுப்பதிலோ நேரத்தைச் செலவழிக்கக் கூடாது. "ஒரு உயிரைக் காப்பாற்ற முதலுதவி தெரிய வேண்டும், ஆனால் அந்த உயிரையே இழக்கச் செய்ய ஒரு நிமிடம் முட்டாள்தனம் போதுமானது." என பாம்பை பிடிப்பது போன்ற முட்டாள்தனங்களை செய்ய வேண்டாம்.

பாம்பு கடித்தால் சில தவறுகளை செய்யவே கூடாது. பழைய சினிமாக்களில் காட்டுவது போல, கடித்த இடத்தில் பிளேடு அல்லது கத்தியால் 'X' வடிவில் அறுத்து ரத்தத்தை வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. இது ரத்தப்போக்கை அதிகரிப்பதோடு, கிருமித் தொற்றுக்கும் வழிவகுத்துவிடும். அதேபோல் வாயால் விஷத்தை உறிஞ்சி துப்புவது மிகப்பெரிய முட்டாள்தனம். உறிஞ்சுபவரின் வாயில் சிறு காயம் அல்லது புண் இருந்தால், விஷம் அவருக்கும் ஏறிவிடும். மேலும், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் கடித்த இடத்தில் புண்ணை அதிகப்படுத்தும்.

கடித்த இடத்திற்கு மேலே கயிறு அல்லது துணியால் ரத்த ஓட்டமே தடைபடும் அளவுக்கு மிக இறுக்கமாகக் கட்டக் கூடாது. இப்படிச் செய்வதால் அந்த உறுப்புக்குச் செல்லும் ரத்தம் நின்று, பின்னாளில் அந்தப் பகுதியையே அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும். லேசாகத் துணியால் சுற்றினால் போதுமானது.

பாம்பு கடித்தவுடன் பயத்தில் ஓடக்கூடாது. நீங்கள் எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறீர்களோ, அவ்வளவு வேகமாக உங்கள் இதயம் துடிக்கும். இதயம் வேகமாகத் துடித்தால் ரத்தத்தின் வழியாக விஷம் உடல் முழுவதும் மிக விரைவாகப் பரவிவிடும். பாம்பு கடித்தால் பதற்றப்படாமல், விரைவாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். அங்கு மட்டுமே முறையான மாற்று மருந்து கிடைக்கும். அவர்கள் உங்களை காப்பாற்றிவிடுவார்கள். உத்தரப்பிரதேசமாநிலம் மதுராவில் செய்தை போல் பாம்புடன் செல்ல வேண்டாம். இது முட்டாள்தனம் ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+