நுழைவு தேர்வில் தோல்வி.. மோடியின் மண்ணில் 8000 ரூபாயில் டீக்கடை.. இன்று 30 கோடியில் பிசினஸ்
டெல்லி: எம்பிஏ படிக்க முடியாமல் நுழைவு தேர்வில் தோல்வி அடைந்த 27 வயது இளைஞர் 8000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய டீக்கடை பிசினஸ் இன்று 30 கோடி அளவிற்கு மாறி உள்ளது. தினமும் ரூ.1.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறதாம். அந்த நிறுவனத்தின் பெயர் தான் எம்பிஏ சாய்வாலா.
தொழில் திறமை என்னவென்றால்,காலமாற்றத்திற்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்வது தான். ஓட்டல் அல்லது டீக்கடைகளை பொறுத்தவரை மக்கள் தரத்தை மட்டும் தான் அந்த காலத்தில் பார்த்தார்கள். ஆனால் 2 கிட்ஸ்களின் காலமான இப்போது ஓட்டல்கள் தரமாக இருக்கிறதா என்பதைவிட பளப்பளவென இருக்கிறதா, நல்ல ஷோக்கேஷில் உள்ளதா, மார்டன் உடையில், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிய படி, தம்மை போல் கடையில் உள்ளவர்கள் இருக்கிறார்களா, அது பெரிய பிராண்ட் போல் தெரிகிறதா என்பதை பார்க்கிறார்கள்.

பல 2கே கிட்ஸ்கள் விலையை பற்றி கவலைப்பட மாட்டார்கள், தரமாகவும் சுமையாவும், அந்த இடம் பிரம்மாண்டமாகவும் இருக்கிறதா என்பதை தான் பார்க்கிறார்கள். இதை மனதில் வைத்து பல முன்னணி ஓட்டல்களும், டீக்கடைகளும் இப்போது பெரிய அளவில் மாறிவிட்டன.
அந்த வகையில் 2கே கிட்ஸ்களின் ரசினையை பிரிந்து கொண்டு, புதுமையாகவும், டீ தயாரிப்பில் புதிய கலையையும் புகுத்திய பிரஃபுல் பில்லோர் என்ற 27 வயது இளைஞர் தொடங்கிய கடையான எம்பிஏ சாய்வாலா இன்று பெரிய பிராண்டாக உருவெடுத்து வருகிறது.
ஐஐஎம்-ல் எம்பிஏ படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட் தேர்வு எழுதி, அதில் தோல்வியடைந்த இளைஞர் பிரஃபுல், தற்போது இந்தியாவின் சிறந்த இளம் தொழிலதிபர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.காலத்திற்கு தகுந்தார் சிந்திப்பது, நுனி நாக்கு ஆங்கிலம் , புத்தி சாதூர்யமான பேச்சு, டீயின் வித்தியாசமான சுவை போன்ற காரணங்களால் பல வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளார்.
எம்பிஏ சாய்வாலா என்பது வெறும் 8000 ரூபாயில் தொடங்கப்பபட் ஒரு சாதாரண டீக்கடை தான்.. ஆனால் இன்று 200க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இந்தியாவின் பல இடங்களில் இயங்கி வருகிறது. இந்த தொழில் மூலம் மட்டுமே தினமும் ரூ.1.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார் பிரஃபுல்.
2017-ம் ஆண்டு பார்ட் டைம் வேலை பார்த்தபடி படித்து வந்த பிரஃபுல், அஹமதாபாத் ஐஐஎம் இல் எம்பிஏ நுழைவு தேர்வில் தோற்று, அதில் படிக்க முடியாமல் போனதால், பார்ட் டைம் வேலையைவிட்டு விலகி முதல்முறையாக அகமதாபாத்தில் உள்ள எஸ்ஜி நெடுஞ்சாலை ஓரமாக சிறிய தள்ளுவண்டியில் டீ கடை ஒன்றை தொடங்கினார்.
தனது டீ கடையை விளம்பரப்படுத்தவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல புதுமையான திட்டங்களை செயல்படுத்திய பிரஃபுல், லூடோ கேம், கிரிக்கெட் போட்டிகளை ஒருங்கிணைத்து இளைஞர்களை ஈர்த்துள்ளார்.
கடையில் உள்ள வெள்ளை நிற பலகையை வைத்து அதில் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு சொல்ல விரும்பும் செய்தியை அதில் எழுதலாம் என்று அறிவித்தார்.இப்படி பல புதுமையான விஷயங்களை பிரஃபுல் செய்தார். இதனால் அஹமதாபாத்தில் பெரிய அளவில் பிரபலமான எம்பிஏ சாய்வாலா டீக்கடை, அடுத்தத இரண்டு வருடங்களில் போபாலில் தொடங்கப்பட்டது. படிப்படியாக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வளர்ந்துள்ளது.
ஒரு தள்ளுவண்டி கடையில் டீக்கடை நடத்திய காலத்தில் பிரஃபுல், சரியான நிதி வசதி இல்லாமல் தடுமாறி உள்ளார். கடையை எப்படி மக்களிடம் பிரபலப்படுத்துவது என்பதில் கடும் சிரமத்தை சந்தித்துள்ளார். மற்ற டீக்கடைக்கும் தனக்கும் உள்ள வித்தியாசத்தையும், டீயின் சுவையை தயார் செய்யவும் அதிக ஆராய்ச்சி மற்றும் ஈடுபாடு மற்றும் உழைப்பை கொட்டியிருக்கிறார் பிரஃபுல்.
அதற்கு படிப்படியாக பலன் கிடைத்ததால் இன்று பெரிய பிராண்டாக மாறி உள்ளது. எம்பிஏ சாய்வாலா டீக்கடையில் டீயின் ருசி தான் வந்து பருக காரணம் என்பதை வாடிக்கையாளர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். பிரஃபுல் பில்லோரியின் தொழில் வெற்றி, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது.












Click it and Unblock the Notifications