இந்தியர்களே ஈரானை விட்டு உடனே வெளியேறுங்க.. மோசமான நிலைமையால் வெளியுறவுத்துறை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரானில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் கிடைக்கும் விமானங்களில் ஏறி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பரபரப்பான அறிவுரையை வழங்கி உள்ளது. மேலும் இந்தியர்களின் உதவிக்கான உதவி எண்களை வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

iran india

1. 2025ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தலின் தொடர்ச்சியாகவும், ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் தற்போது ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்களான மாணவர்கள், யாத்ரீகர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா பயணிகள் உடனடியாக கிடைக்ககூடிய விமானங்களில் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகிறது.

2. அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும். நாட்டில் நிலவும் புதிய நிலவரங்கள் பற்றி அறிய உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்க வேண்டும்.

3. ஈரானில் அனைத்து இந்திய குடிமக்களும் தங்களின் பாஸ்போர்ட் மற்றும் பிற அடையாள அட்டைகளை ரெடியாக வைத்திருக்க வேண்டும். இது தொடர்பாக எந்தவொரு உதவிக்கும் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்.

4. இந்திய தூதரகத்தின் அவசரத் தொடர்பு உதவி எண்கள் இதுதான். தொலைபேசி எண்கள்: +989128109115; +989128109109; +989128109102; +989932179359. மேலும் இ-மெயில்: [email protected]

5. ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யாத அனைத்து இந்தியக் குடிமக்களும் https://www.meaers.com/request/home என்ற இணையபக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை தூதரகத்தின் இணையதள பக்கத்தின் வழியாகவும் செய்யலாம். ஒருவேளை நெட்வொர்க் பிரச்சனை இருப்பின் அவர்கள் இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பத்தினர் வழியாக இந்த இணையதளத்தின் வழியாக பதிவு செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+