ஹனிமூன் கொலை: நல்லவன் மாதிரி ரகுவன்ஷியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட சோனமின் காதலன்
சில்லாங்: மேகாலயா ஹனிமூன் சென்ற கணவனை மனைவியே காதலன், கூலிப்படையுடன் சதி திட்டம் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு மனைவி சோனமின் காதலன் ராஜ் குஷ்வஹா மூளையாக செயல்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ராஜாவின் இறுதிச் சடங்கில் ராஜ் நல்லவன் போல கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (வயது 29). இவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். அவருக்கு சோனம் (வயது 25) என்ற பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த மே மாதம் 11 ஆம் தேதி திருமணமானது. தொடர்ந்து இந்த புதுமண தம்பதி கடந்த மே 20 ஆம் தேதி மேகாலயா மாநிலத்துக்கு ஹனிமூன் சென்றனர்.

சில்லாங் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கி மேகாலயாவை சுற்றிப் பார்த்துள்ளனர். கடந்த 23 ஆம் தேதி அவர்கள் அந்த ரிசார்ட்டில் இருந்து செக் அவுட் செய்துள்ளனர். அதன்பிறகு இருவரும் மாயமாகிட்டனர். உறவினர்களால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் உறவினர்களுக்கு இவர்களின் பயண திட்டம் குறித்தும் தெரியவில்லை.
இதையடுத்து ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் குடும்பத்தினர் மேகாலயா காவல்துறையில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தேடினார்கள். பல்வேறு மர்மங்கள் நிலவி வந்த காரணத்தால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் ஹனிமூன் சென்ற புதுமண தம்பதியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் சடலம் அழுகிய நிலையில் மேகாலயாவின் காட்டுப் பகுதிக்கு அருகில் மீட்கப்பட்டது. தலை மற்றும் உடலில் ஆங்காங்கே காயங்கள், ரத்தக் கறை ஆகியவை ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டதற்கான சந்தேகத்தையே ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனையிலும் அது உறுதியாக மர்மம் மேலும் அதிகரித்தது.
அதேநேரத்தில் மனைவி சோனம் குறித்த தகவல் கிடைக்கவில்லை. அவருக்கும் ஏதாவது ஆகிவிடுமா என்று குடும்பத்தினர் பதறிக் கொண்டிருந்தனர். இதனிடையே உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் பகுதியில் உள்ள ஒரு தாபாவில் சோனம் அழுது கொண்டிருந்துள்ளார். தாபா உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உபி காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு கைது சோனமை செய்தனர்.
கணவனை கொலை செய்த குற்றத்துக்காக கூலிப்படையினருடன் சோனமும் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்துக்கு முன்பே சோனம் தன்னை விட வயதில் சிறிய ராஜ் குஷ்வஹா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அதை அவரின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் காதலன் மூலம் கூலிப்படையை பணியமர்த்தி ராஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சோனம், அவரின் காதலன் ராஜ் குஷ்வஹா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டது ராஜ் குஷ்வஹா தான். அவர் தான் மத்தியப்பிரதேச கூலிப்படையினரை மேகாலயா அழைத்து சென்று ராஜாவை கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ் தொடர்பாக மேலும் சில அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "இந்த தம்பதி ஹனிமூன் சென்றவுடன் ராஜ் உடனடியாக மேகாலயா செல்லவில்லை. அவரும் உடனடியாக புறப்பட்டால் சந்தேகம் வரும் என்பதால் முதலில் கூலிப்படையினரை அனுப்பி புதுமண தம்பதி செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து நோட்டமிட வைத்துள்ளார். சில நாள்களில் அவனும் மேகாலயா சென்றுள்ளான்.
காதலி சோனம் மூலம் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டுள்ளனர். ஹனிமூன் திட்டத்தை நீட்டிப்பும் செய்துள்ளனர். ராஜா கொலை செய்யப்பட்ட பிறகு ராஜ், சோனம் இருவரும் இணைந்து உத்தரப்பிரதேசம் சென்று சில நாட்கள் தங்கியுள்ளனர். ராஜாவின் சடலம் கிடைத்த பிறகு சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக ராஜ் குஷ்வஹா மட்டும் இந்தூர் சென்றுள்ளார்.
ராஜா ரகுவன்ஷியின் இறுதி சடங்கில் சோனம் உறவினர்களும் பங்கேற்றுள்ளனர். இதற்காக சோனம் வீட்டார் வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். அதில் ஒரு வாகனத்தை ராஜ் தான் இயக்கியுள்ளான். நல்லவன் போல இறுதி சடங்கில் தலை காட்டி விட்டு மீண்டும் எஸ்கேப் ஆகியுள்ளான். இதை சோனமின் உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். யாரிடமும் பேசாமல் ராஜ் அமைதியாகவே இருந்துள்ளான்.
இறப்பு துக்கம் காரணமாக உறவினர்களுக்கும் அப்போது அவன் மீது சந்தேகம் வரவில்லை. தற்போது அவன் கைது செய்யப்பட்ட பிறகு தான் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இந்த தகவலை சொல்லியிருக்கிறார்கள். சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது வீட்டுக்கும் சென்று வந்துள்ளான். இந்த வழக்கு தொடர்பாக மேகாலயாவில் ஒரு குழுவினரும், மத்தியப்பிரதேத்தில் ஒரு குழுவினரும் விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications