ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ரீல் செய்யுங்க- மெட்டா இந்தியா ஆபீசுக்கு செல்ல வீடு தேடி வரும் வாய்ப்பு!
டெல்லி: நாட்டின் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் அமிர்ததலைமுறை இயக்கத்தை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தொடங்கி வைத்தார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தங்களது எதிர்கால விருப்பங்கள் தொடர்பாக ரீல்ஸாக இளைஞர்கள் பதிவிட்டால் சிறந்த பதிவர்கள் தேர்வு செய்யப்பட்டு மெட்டா இந்தியா அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
இந்தியாவின் இளைஞர்கள் தங்களின் எதிர்கால விருப்பங்களையும், கனவுகளையும் வெளிப்படுத்த ஊக்கப்படுத்தி அவர்களுக்கு அதிகாரமளிக்கவும், செயல்பாடுகளில் ஈடுபடுத்தவும் அமிர்த தலைமுறை இயக்கத்தை மெட்டா நிறுவனத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்ஸ்மிருதி சுபின் இரானி இன்று தொடங்கி வைத்தார். இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகியவற்றில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் தங்களின் விருப்பங்களையும், படைப்பாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள அமிர்த தலைமுறை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. தாங்கள் வளரும் போது என்னவாக விரும்புகிறோம் என்பதை பங்கேற்பாளர்கள் கண்டறிய இது ஊக்கமளிக்கிறது.

இந்த இயக்கத்தின் தொடக்க நிகழ்வில் பேசிய ஸ்மிருதி சுபின் இரானி, "நமது இளைஞர்கள் எதிர்கால இந்தியாவின் சிற்பிகள் ஆவர். இளைஞர்களின் ஈடுபாட்டையும், ஊக்கத்தையும் அதிகரித்து அவர்களின் விருப்பங்கள் நிறைவேற வழிவகுப்பதை நோக்கமாக கொண்டிருப்பது அமிர்த தலைமுறை இயக்கமாகும். அவர்களின் கனவுகள் நனவாக அவர்களுக்கு தேவையான உதவியையும், ஊக்கத்தையும் இது உறுதி செய்யும். அர்த்தமுள்ள இந்த முன்முயற்சிக்கு மெட்டா இந்தியா நிறுவனம் பங்குதாரராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.
மெட்டா இந்தியா நிறுவனத்தின் கொள்கைப் பிரிவு தலைவரும், அரசு தொடர்பாளருமான நட்டாஷா ஜோக் பேசுகையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துடன் மற்றொரு சிறந்த முன்முயற்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

அமிர்த தலைமுறை இயக்கத்தில் பங்கேற்போர் தங்களின் விருப்பங்களை #Amrit Generation என்ற ஹேஷ்டேகுடன் இன்ஸ்டாகிராம் அல்லது முகநூலில் பதிவிட வேண்டும். இதற்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவற்றை முகநூலின் ஜிபிஏ பக்கத்திலும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சமூக ஊடகங்களிலும் காணலாம். பங்கேற்பாளர்களின் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு, புதுதில்லிக்கு அழைக்கப்பட்டு மூத்த கொள்கை வகுப்போர், தொழில் துறை தலைவர்கள் போன்றோருடன் கலந்துரையாட வகை செய்யப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்களின் கனவுகள் நிறைவேற வழிகாட்டுதல் அளிக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் குருகிராமில் உள்ள மெட்டா நிறுவன அலுவலகத்திற்கு பயணம் செய்யும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications