அசிங்கம் அசிங்கம்.. அத்தனை பேர் சுற்றியிருக்க அத்துமீறிய ஜோடி.. அதுவும் மெட்ரோ ரயிலில்.. கண்ணே கூசுது
டெல்லி: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அத்துடன் வன்மையான கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.
சமீபகாலமாக பொதுவெளியில், சில காதலர்களின் அட்டகாசங்கள் எல்லை மீறி போய் கொண்டிருக்கின்றன.. அதிலும் டெல்லி மெட்ரோ ரயிலில், இந்த அநாகரீகங்கள் அதிகரித்தபடியே வருகின்றன.
டெல்லியை பொறுத்தவரை, நவநாகரீகத்தில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான இளைய தலைமுறையினர் மார்டனாக இருக்கிறார்கள். இதில் பெண்கள், தங்கள் ஆடை அலங்காரங்களில் சற்று கூடுதல் கவனத்தையே செலுத்தி வருகிறார்கள்.. ஆனால், இது சமீபகாலமாகவே எல்லைமீறிவிட்டதாக கருதப்படுகிறது.

அரைகுறை ஆடை: 2 மாதங்களுக்கு முன்பு, டெல்லி மெட்ரோ ரயிலில், அரைகுறை ஆடையுடன் இளம்பெண் பயணித்தார். நீச்சல் உடை அணிந்தபடியே, மெட்ரோவில் ஏறி உட்கார்ந்திருந்தார் அந்த பெண்.. இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பார்த்ததுமே பொதுமக்கள் பதறிவிட்டனர்.
இதையடுத்து, மெட்ரோ நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது.. "கண்ணியமற்ற அநாகரீகமாக ஆடை அணிந்து பயணிப்பது குற்றமாகும்.. தான் விரும்பிய ஆடைகளை அணிவது என்பது தனிப்பட்ட சுதந்திரம் என்றாலும், பொது போக்குவரத்தில் இது போன்ற அநாகரிகமாக ஆடை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு ஆபாச சம்பவம் அரங்கேறியது..
மெட்ரோ நிறுவனம்: அன்றைய தினம், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர், தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டிருந்தார்..
பிறகு, திடீரென சுயஇன்பத்தில் ஈடுபட துவங்கிவிட்டார்.. பட்டப்பகலில், சக பயணிகள் அத்தனை பேர் முன்னிலையிலும், இப்படி ஒரு காரியத்தை செய்யவும், அதிர்ச்சி அடைந்த பெண்கள், அலறியடித்து கொண்டு, தங்கள் இருக்கைகளை விட்டு வேறு இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டனர்..
காதல் ஜோடி: இதுபோல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறும் நிலையில், இன்றும் ஒரு அசிங்கம் நடந்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்த ஒரு காதல் ஜோடி, கூல்டிரிங்ஸ் குடித்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் கூல்டிரிங்ஸை தன்னுடைய வாயில் ஊற்றி கொண்ட ஆண், மறுமுனையில் இருக்கும் பெண்ணின் வாயில் அந்த ஜூஸை பகிர்கிறார்.. அதே போல் அந்த பெண்ணும், வாயில் ஜூஸ் ஊற்றிக்கொண்டு, அந்த ஆணின் வாய்க்கு பகிர்கிறார்.. இவ்வளவும், பயணிகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது.. இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.. இந்த விடியோவை பார்த்த பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
கடும் கண்டனம்: இதுபோன்ற சம்பவங்களைக் கண்டால் உடனடியாகப் புகாரளிக்குமாறு பயணிகளை மெட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது என்றாலும், இந்த வக்கிரங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது, பெருத்த வேதனையை பொதுமக்கள் தரப்பில் ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications