டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு - மத்திய அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    #BREAKING மார்ச் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

    இந்தியாவில் கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    MHA announces to extend lockdown upto March 31,2021

    தினந்தோறும் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. சில இடங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

    இந்த நிலையில் இந்த மாதத்துடன் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கொரோனாவின் புதிய பாதிப்பை கருத்தில் கொண்டு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் பழைய பாதிப்புகளில் கணிசமான சரிவு இருக்கும் நிலையிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பது அவசியமாகிறது.

    தமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதி தமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதி

    கொரோனாவை கட்டுப்படுத்தவும் நோய் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    MHA announces to extend lockdown upto March 31,2021

    கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வெளியான நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Ministry of Home Affairs issued an order to extend the existing lockdown upto March 31, 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X