டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாறுமாறா விலை ஏற்றக்கூடாது.. 3 மாதம் இதுதான் விமான கட்டணம்.. டிக்கெட் ரேட் அறிவித்த மத்திய அமைச்சர்

Google Oneindia Tamil News

டெல்லி: விமானங்களில் அதிகபட்ச கட்டண வரம்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஹர்திப் சிங் புரி தெரிவித்தார். இதன்படி, டெல்லி-மும்பை விமானத்தில் அதிகபட்சம் ரூ.10,000 கட்டணம் வசூலிக்கலாம்.

Recommended Video

    Domestic Flight Travel Rules In India

    மறுபடியும் விமான போக்குவரத்து துவங்க உள்ளதாக அறிவித்ததுமே, சில விமான நிறுவனங்கள், இஷ்டத்துக்கு கட்டணத்தை ஏற்றி லாபம் பார்க்க திட்டமிட்டதால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    மே 25ம் தேதி முதல் உள்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் மெல்ல மெல்ல மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தெரிவித்தார்.

    என்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோஎன்னா இது.. பார்ப்பதற்கு நாய் போலவே இருக்கிறதே.. ஆனால் இது அது இல்லை.. வைரலாகும் வீடியோ

    நடைமுறை வெளியீடு

    நடைமுறை வெளியீடு

    விமான நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பதற்காக, நடவடிக்கை எடுத்துள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான அமைச்சகம் இன்று ஒரு நிலையான இயக்க நடைமுறைகளை (SOPகள்) வெளியிட்டது, அதில் ஒன்று விமானக் கட்டணங்களுக்கான வரம்புகளை நிர்ணயிப்பது ஆகும்.

    கட்டண விவரம்

    கட்டண விவரம்

    விமான நிறுவனங்கள், அதன் கட்டண வரம்பை (குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம்) இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும். விமான பயணம் மலிவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறைந்தபட்ச கட்டணம் மற்றும் அதிகபட்ச கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. டெல்லி முதல் மும்பை வரை குறைந்தபட்ச கட்டணம், 3,500 ஆகவும், அதிகபட்சம் ரூ.10,000 ஆகவும் இருக்கும். 3 மாதங்களுக்கு இந்த நடைமுறை தொடரும்.

    வழித்தடங்கள்

    வழித்தடங்கள்

    வழித்தடங்கள் 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: 0-30 நிமிடங்கள், 30-60 நிமிடங்கள், 60-90 நிமிடங்கள், 90-120 நிமிடங்கள், 120-150 நிமிடங்கள், 150-180 நிமிடங்கள், 180-210 நிமிடங்கள். இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப கட்டண உச்சவரம்பு அமையும்.

    விதிமுறைகள்

    விதிமுறைகள்

    இந்திய விமான நிலைய ஆணையம், முன்னதாக, புதிய வழிகாட்டுதல்களை இன்று அறிவித்திருந்தது. அதில் விமான பயணிகளுக்கு ஆரோக்கிய சேது ஆப் கட்டாயம், டிஜிட்டல் முறையில், டிக்கெட் செக்கிங் செய்யப்படுவது, சமூக இடைவெளி என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

    English summary
    We've set a minimum & a maximum fare. In the case of Delhi, Mumbai the minimum fare would be Rs 3500 for a journey between 90-120 minutes, maximum fare would be Rs 10,000. This is operative for 3 months
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X