இஸ்ரேல் ஈரான் மோதலில் சிக்கிய இந்தியர்கள்.. கடத்தப்பட்ட கப்பலின் நிலை என்ன? மத்திய அரசு அப்டேட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பல் ஒன்றை ஈரான் கைப்பற்றியது. இதில் 17 இந்தியர்கள் இருக்கும் நிலையில் அவர்களை இந்திய அதிகாரிகள் நேரில் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் முக்கிய ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்த ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் நேற்று தாக்குதலை தொடுத்திருக்கிறது.

Ministry of External Affairs plans to meet 17 Indians trapped in ship seized by Iran

மறுபுறம், இஸ்ரேலு்டன் தொடர்புடைய சரக்கு கப்பல் ஒன்றையும் ஈரான் கடத்தியுள்ளது. துபாயிலிருந்து இந்தியா நோக்கி எம்எஸ்சி ஏரீஸ் என்கிற சரக்கு கப்பல் வந்துக்கொண்டிருந்தது. ஓமன் வளைகுடா அருகில் உள்ள ஹார்முஸ் நீரிணை பகுதியில் இக்கப்பல் ஹெலிகாப்டர் மூலம் வழிமறித்து கடத்தப்பட்டிருக்கிறது. இந்த கப்பல் இஸ்ரேலிய பெரும் கோடீஸ்வரரான ஈயால் ஒஃபருக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கப்பலில் மொத்தம் 25 மாலுமிகள் இருக்கின்றனர். அதில் 17 பேர் இந்தியர்கள். எனவே இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லஹியானியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து நேற்று தனது x தளத்தில் பதிவிட்டிருந்த அவர், "எம்எஸ்சி ஏரீஸ் கப்பலில் உள்ள 17 இந்திய மாலுமிகளை விடுவிப்பது குறித்து ஈரான் அமைச்சரிடம் பேசினேன். ஈரான் இடம்பெற்றுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய சூழல் குறித்து அவரிடம் விவாதித்தேன். இஸ்ரேல், ஈரான் மோதலால் மேலும் பதற்றம் அதிகரிப்பதை தவிர்த்து ராஜீய ரீதியில் பிரச்னைக்கு தீர்வு மாணுமாறு வலியுறுத்தியுள்ளேன். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்திய மாலுமிகள் குறித்த மற்றொரு அப்டேட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அதாவது, கப்பலில் சிக்கியுள்ள 17 இந்திய மாலுமிகளின் நிலையை உணர்ந்துக்கொள்ள அவர்களை நேரில் சந்திக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது அவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+