Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் தலைமையில் திரளும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. பாஜகவுக்கு எதிராக ‘மாஸ்’ கூட்டணிக்கு அச்சாரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான அச்சாரமாக அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகப் பங்கேற்க உள்ளனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நாளை டெல்லியில் நடைபெறுகிறது அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மாநாடு.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொள்கின்றனர்.

சமூக நீதி கூட்டமைப்பு

சமூக நீதி கூட்டமைப்பு

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்க அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார் திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அதன்படி பாஜகவை தவிர்த்து இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 37 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த கூட்டமைப்பில் இணைய கடிதம் எழுதினார். இந்நிலையில், சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு, டெல்லியில் உள்ள கஸ்தூரிபா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் நாளை மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் காணொளிக் காட்சி மூலமாக கலந்து கொள்ள உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வழியாக கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார். சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஈஸ்வரய்யா வரவேற்புரை ஆற்றுகிறார். ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் முதன்மை உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தேசிய தலைவர்கள்

தேசிய தலைவர்கள்

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மகாராஷ்டிரா துணை முதல்வருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், பீகார் - ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான இ.டி.முகமது பஷீர், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. கே.கேசவ ராவ், ராஷ்டிரிய சமாஜ்பக் தேசிய தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் மந்திரியுமான மகாதேவ் ஜன்கர், அசாம் எம்.பி. நபா குமார் சாரானியா, அரியானா லோக் தந்திர சுரக்சா கட்சியின் முன்னாள் எம்.பி.ராஜ்குமார் சயினி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து

தமிழ்நாட்டில் இருந்து

தமிழ்நாட்டில் இருந்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இரண்டாவது பெரிய முயற்சி

இரண்டாவது பெரிய முயற்சி

லோக்சபா தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில், திமுகவின் இரண்டாவது முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், உ.பி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா ஆகிய தேசிய அரசியல் தலைவர்களை சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்தி பாஜகவுக்கு எதிரான குரலை வலுப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

 பாஜகவுக்கு எதிராக

பாஜகவுக்கு எதிராக

இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் சமூக நீதி மாநாட்டில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பா.ஜ.கவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவதில் தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டாலினின் முக்கியமான கூட்டணி ஒருங்கிணைப்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

அந்த கட்சிகளும்

அந்த கட்சிகளும்

குறிப்பாக, காங்கிரஸ் கட்சி உடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் சில கட்சிகளின் தலைவர்களும், தங்களின் சார்பாக பிரதிநிதிகளை இந்த மாநாட்டில் பேச அனுப்புகின்றன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்பி டெரெக் ஓ பிரைன், அரவிந்த் கெஜ்ர்விவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்.பி சஞ்சய் சிங், சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி சார்பில் எம்.பி டாக்டர் கேசவ ராவ் ஆகியோர் இந்த சமூக நீதி மாநாட்டில் உரையாற்றுகின்றனர். இந்த மேடையே பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+