ப.சிதம்பரத்திற்கு ஸ்டாலின் ஆதரவு.. அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணையில் ப.சிதம்பரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சூழ்நிலையில், சென்னையில் இன்று நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம்.

ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுனர், வழக்கை சட்டரீதியாகவே அவர் சந்திப்பார். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சிகள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிதம்பரம் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக, காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications