தற்காலிக மேம்பாலம்.. டிராபிக்கிற்கு இடையூறு இன்றி சாலை போடலாம்.. ஆனந்த் மகிந்திரா பதிவை பாருங்க
டெல்லி: மவுண்ட் ரோடு போன்ற பரபரப்பான சாலையில் கூட போக்குவரத்துக்கு கொஞ்சம் கூட பாதிப்பு இன்றி சாலைகளை பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடிய புதுமையான கண்டுபிடிப்பு பற்றிய வீடியோவை ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளர்.
பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர். தனக்கு பிடித்த விஷயங்கள், கண்டு வியந்த புதுமை கண்டுபிடிப்புகள், எளிய மனிதர்களின் சாதனை, சுவாரசியமான பல வீடியோக்களை தனது எக்ஸ் தளத்தில் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் ஆனந்த் மகிந்திரா, தனது எக்ஸ் தளத்தில் எளிதில் எடுத்து செல்லக் கூடிய தற்காலிக மேம்பாலம் குறித்த வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:- மொபைல் மேம்பாலம்.. இதன் மூலம் போக்குவரத்துக்கு பாதிப்பு இன்றி சாலை பணிகளை செய்ய முடியும்.
அனைத்திலும் புதுமை ஏற்படுவது போல அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுவும் அமையும். தயவு செய்து இதை நிலையான வழிகாட்டு நெறிமுறையாக நாம் மாற்ற முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவும் ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பரபரப்பான சாலை ஒன்றில் சாலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்காலிக மெம்பாலம் ஒன்றையும் அமைத்து இருக்கிறார்கள். இந்த மேம்பாலத்தில் வழியாக வாகனங்கள் வழக்கம் போல சென்று கொண்டிருக்கின்றன. மேம்பாலத்திற்கு கீழே சாலைகளை போடும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதன் மூலம் வாகன போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இன்றி சாலைகள் அமைக்கப்படுகிறது.
இந்த புதுமையான நகரும் மேம்பாலம் மூலம் பிசியான சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு எந்த இடையூறும் இன்றி சாலைகளை போட முடியும் வகையில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்தியாவிலும் இதே போன்ற மேம்பலாத்தை சாலைகள் போடும் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பாக நகர்ப்புறங்களில் பெரிதும் உதவும் எனவும் பதிவிட்டு வருகிறார்க்ள்.

ஆனந்த மகிந்திரா பகிர்ந்த இந்த வீடியோ, "சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில், சாலைகள் போடும் பணியின் போது எடுக்கப்பட்டது ஆகும். சுவிட்சர்லாந்தின் பிசியான நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஏ1 ஹைவேயில் சாலைகளை போடும் போது இந்த மேம்பாலத்தை நிறுவிவிட்டு அதன்பிறகு ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுவிட்சர்லாந்தின் மத்திய சாலை அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. இதனை ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications