'ஜோதிராதித்யா' எனும் நான்.. மீண்டும் மத்திய அமைச்சரான சிந்தியா.. அரச குடும்ப பின்னணி! யார் இவர்?
டெல்லி: மத்திய பிரதேசத்தின் குணா லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிராதித்ய சிந்தியா, மோடியின் 3.0 விலும் பிரதமராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராத்திய அரச குடும்பத்தின் வாரிசு ஜோதிராதித்ய சிந்தியா ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு குவாலியர் அரச சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. குவாலியர் சமஸ்தானத்தின் கடைசி மகாராஜா ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையான மாதவ்ராவ் சிந்தியா இருந்தார். இப்போதும் முடிசூடா மன்னராக அந்தப் பகுதி மக்களால் மதிக்கப்பட்டு வருகிறார்.

ஜோதிராதித்ய சிந்தியா 2001-ல் அவரது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அடுத்த ஆண்டே நடைபெற்ற தேர்தலில் தங்கள் குடும்பத்தின் பாரம்பரியாக வென்ற குணா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் 4.5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். அடுத்த சில ஆண்டுகளில் அவரை மத்தியப் பிரதேச காங்கிரஸின் முகமாக ஜோதிராதித்யா சிந்தியா மாறினார்.
2007-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி., துறை இணை அமைச்சராக இருந்தார். 2009-ஆம் ஆண்டு மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை , 2012-ஆம் ஆண்டு மின்சார துறை அமைச்சர் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ஆனால் மத்திய பிரதேசத்தில், 2018 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பெரும் பாடு பட்டு ஜோதிராதித்ய சிந்தியா வெற்றி பெற வைத்தார்.
ஆனால், கமல்நத்திற்கு கட்சி மேலிடம் முதல்வர் பொறுப்பை கொடுத்ததை ஜோதிராதித்ய சிந்தியாவால் ஏற்க முடியவில்லை. இதையடுத்து, பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைய சிந்தியாவின் பங்கு பெருமளவில் இருந்தது. இதற்கு கைமாறாக மத்திய அமைச்சர் பொறுப்பை சிந்தியாவுக்கு கொடுத்தது. தற்போது புதிய அமைச்சரவையிலும் சிந்தியாவுக்கு பதவி கொடுத்துள்ளது கட்சி மேலிடம்.
மோடியின் முந்தைய அமைச்சரவையில் ஜோதிராதித்ய சிந்தியா சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். மூன்று ஆண்டுகள் இந்த பொறுப்பை வகித்துள்ளார். மோடியின் புதிய அமைச்சரவையில் அவருக்கு எந்த பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
-
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications