டிரம்பின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
Recommended Video
மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் ஜி7 நாடுகள் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இவை வர்த்தகம், பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடத்தும்.

இந்த ஆண்டு இந்த மாநாட்டை அமெரிக்கா தலைமையேற்று நடத்துகிறது. இந்த நிலையில் ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியாவை அழைக்க டிரம்ப் முடிவு செய்திருந்தார். அதன்படி அவர் நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் பேசினார்.
அப்போது ஜி7 மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் டிரம்பின் அழைப்பை ஏற்று வரும் செப்டம்பரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஜி7 மாநாட்டை அமெரிக்கா தலைமையேற்று நடத்துவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார். அப்போது அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு விடுத்தார். உறுப்பு நாடுகளாக உள்ள 7 நாடுகளுடன் இந்தியா உள்பட சில நாடுகள் கலந்து கொள்ள விருப்பப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதனடிப்படையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
அமெரிக்கா, மற்ற நாடுகள் நடத்தும் ஜி7 மாநாடு வெற்றியடைய இந்தியாவும் இணைந்து பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அப்போது டிரம்பின் தொலைநோக்கு அணுகுமுறையை மோடி பாராட்டினார் என தெரிவித்துள்ளது பிரதமர் அலுவலகம். டிரம்பின் அழைப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் ரஷ்யாவோ சீனாவை தனிமைப்படுத்தும் திட்டத்திற்கு ஏற்க மறுத்து அழைப்பை நிராகரித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications